தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

13 Jan 2026, 3:17 pm
வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

மருத்துவப்  பணிகள்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ மனைகளில் மருத்துவர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மொத்தம் 175 இடங்களை நிரப்பப் போகும் இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.  20 வகையான பணிகள் இதில் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்  தகுதிகள், அனுபவம் ஆகியவை குறிப்பிடப் பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு மூலமாகவே தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வுக்கான விபரங்கள் மற்றும் விண்ணப்பம் www.echs.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றிதழ்களோடு OIC, ECHS, Stn HQ (ECHS Cell), Delhi என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : ஜனவரி 28, 2026. கூடுதல் விபரங்களுக்கு 8448198118 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ராணுவத்தில் பொறியாளர் பணி

இந்திய ராணுவப் படையில் லெப்டினன்ட் பதவிக்கான (350)  ஆட்சேர்ப்புஅறிவிப்புகள் 2026இன் பல்வேறு பிரிவுகளுக்கு (SSC Technical, TGC, TES) வெளியிடப்பட்டுள்ளன. கல்வித்தகுதி: B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடவாரியான காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விபரம் அறிய இணையதளத்தை பார்வையிடலாம். வயது வரம்பு : அக்டோபர் 1, 2026 தேதியின் படி, குறைந்தபட்சம் 20  வயது மற்றும் அதிகபட்சமாக 27 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு முறை : லெப்டினன்ட் பணிக்கு தகுதியானவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் SSBஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்தியன் மிலிட்டரி அகாடமி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது அக்டோபர் மாதத்தில் (2026) வழங்கப்படும். நடைபெறும் இடம், தேர்வுத் தேதி ஆகியவை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி/எஸ்.டி/பெண்கள்/முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. என்.சி.சி சிறப்பு  நுழைவுத் திட்டத்திற்கும் விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இதர பிரிவினர் ரூ.250 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.முழுமையான அறிவிக்கையைப் பெற www.joinindianrmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதி : பிப்ரவரி  5, 2026

ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் 210 காலிப் பணியிடங்கள் வந்துள்ளன. ஐடிஐ-யில் பல்வேறு சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்திருப்பவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : அதிகபட்ச வயதாக 35 நிர்ணயிக்கப்ப ட்டிருக்கிறது. ஜனவரி 23, 2026 ஆம் தேதியின்படி இது கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. கல்வித்தகுதி :  13 வகையான பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பணியிடங்களுக்கு ஏற்ற கல்வித்தகுதிகள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. அந்தப் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு, தொழில் பழகுநர் பயிற்சி (Apprentice) மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர்,  மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியமாகும். தேர்வு முறை : இரு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஆன்லைன் வாயிலாக எழுத்துத் தேர்வும், பின்னர் நேரடியாக செய்முறைத் தேர்வும் நடைபெறும். இவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.  மற்றவர்கள் ரூ.700 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி கேள்வித்தாள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுக்கு www.cochinshipyard.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பிப்பதற்குக் கடைசித் தேதி: ஜனவரி 23, 2026

ரயில்வேயில்  வேலை

தென் கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு வந்திருக்கிறது. 54 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. 17 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் தகுதி மற்றும் சாதனைகளைச் செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2024 ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சாதனைகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஜனவரி 1, 2026 அன்று 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி மற்றும் சாதனைகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்படுவார்கள். இது குறித்த முழு விபரங் களுக்கு www.rrcser.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசித் தேதி : பிப்ரவரி 9, 2026

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.