வாய்ப்பு வாசல் - அமர்த்தியா
18 Feb 2026, 3:04 pm

ஆர்பிஐ (RBI) யில் 650 காலிப் பணி இடங்கள்

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) தனது பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் (Assistant) பதவிக்கான 650 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகள் (Preliminary & Main) மற்றும் மொழித்திறன் தேர்வு (Language Proficiency Test) அடிப்படையில் நடத்தப்படும். முழுமையான அறிவிப்பு விவரங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org.in யில் 2026 பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்படும்.

பிஒபி (BOB) - வங்கியில் 253 காலிப் பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 253 சிறப்பு அதிகாரிகள் (Specialist Officer (SO)) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் முன்னேற்றமான பணியை நாடுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். கல்வித்தகுதி: (Marketing / Finance) மார்க்கெட்டிங்/ பைனான்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் எம்பிஏ (MBA) அல்லது முதுநிலை டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்று இருப்பது அவசியமாகும். இப்பணி அனுபவங்கள் ஒவ்வொரு பதவிக்கேற்ப மாறுபடும். வயது வரம்பு - ஜனவரி 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ பிடபுள்யுடி பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது பற்றிய முழு விபரம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் - பொது, ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.850. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோர் ரூ.175 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.bankofbaroda.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி பிப்ரவரி 26 ஆகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 அப்ரண்டிஸ் பயிற்சி

அரசு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 5 ஆயிரத்து 138(தொழில் பழகுநர்) பயிற்சி பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பு (Advt No: HRD / Apprentice / 2025–26) வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். ஜனவரி 1, 2026 தேதி யின்படி வயதுவரம்பு மற்றும் கல்வித் தகுதி ஆகியவை கணக்கிடப்படும். வயது வரம்பு - குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை. எஸ்.சி./எஸ்.டி – 5 ஆண்டுகள், ஓ.பி.சி – 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகள் – 10 ஆண்டுகள் என தளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. தேர்வு முறை - ஆன்லைன் வழி எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் - பொது, ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.800. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு ரூ.200 கட்டணம். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப் பதாரர்கள் கல்வித் தகுதி பற்றி விபரங்களை www.apprenticeship.india.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படை யில் தகுதியானவர்களைத் தேர்வு செய்வார்கள். பாடப்பிரிவுகள், தேர்வுக்கான பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட முழு விபரங்களுக்கு www.pnb.bank.in.Recruitment என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 24 ஆகும்.