சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்த தூர்தர்ஷன் செய்தியாளர்
29 May 2026, 8:15 pm

சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்த தூர்தர்ஷன் செய்தியாளர்

புதுதில்லி ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது ; மறுமதிப்பீட்டு குளறுபடி (ஒரு பாடத்திற்கு ரூ.60,000க்கு மேல்) என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு விடைத்தாள்கள் தவறாக மாற்றப்பட்ட நிகழ்வும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நிகழ்ந்துள்ளது.

இந்தக் குறைபாட்டிற்கு பொறுப்பேற்பதாகக் கூறி, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரச்சனையை மூடி மறைக்க முயன்று வருகிறார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்து தூர்தர்ஷன் (ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனம்) செய்தியாளர் ஒருவர் வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய வேதாந்த் என்ற மாணவர் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில், “சிபிஎஸ்இ எனக்கு அளித்த இயற்பியல் விடைத்தாளின் நகல் வேறொரு மாணவருக்குரியது.

இதைக்கண்டு தான் நிலைகுலைந்து போனேன்” எனக் கூறி, விடைத்தாள்களை பகிர்ந்துள்ளார்.

வேதாந்த்தின் பதிவை ஷேர் செய்து, நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிபிஎஸ்இ மற்றும் மோடி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதனால் பதற்றமடைந்த சிபிஎஸ்இ இயற்பியல் தாளில் ஏற்பட்ட குளறுபடியை ஒப்புக்கொண்டதுடன், வேதியியல் விடைத்தாள் தொடர்பான தனிப்பட்ட புகார் (மற்றொரு சம்பவம்) ஒன்றையும் ஏற்றுக்கொண்டது.

வேதாந்த்தின் பதிவைப் பார்த்த தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தின் மூத்த தொகுப்பா ளரும், ‘தோ துக்’ என்ற நிகழ்ச்சியின் முகமுமான அசோக் ஸ்ரீவஸ்தவ், “பாகிஸ்தானி யர்களும் சிபிஎஸ்இ தேர்வுஎழுதினார்களா?!!” என்று வெறுப்புப் பேச்சுடன் அடாவடியாகப் பதிவிட்டார்.

எதிர்ப்புகள் கிளம்பவே வேதாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனது தவறுக்காக அசோக் ஸ்ரீவஸ்தவ் மன்னிப்புக் கோரினார்.