தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம்

9 Apr 2026, 5:30 am
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம்

தருமபுரி, ஏப்.9- தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி முறைமையை பேணி பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து முன்னெடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவது தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக வாக்கு சேகரிப்பது, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது.

மேலும், தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் அதிகளவு சுற்றிச்செல்லும் நிலையை தவிர்த்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் (10 நிமிடங்களுக்கு ஒரு முறை) அதிக எண்ணிக்கையில் நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி நான்கு ரோடு, ஆப்பிகாரம், ஓட்டப்பட்டி வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சுழற்சி முறையில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகல்நேரம் மட்டுமல்லாது, பகலில் நத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புறம்போக்கு நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கூத்தாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை காலி செய்ய தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். மேற்கண்ட இடங்களில் வனத்துறையின் அத்துமீறல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேளாண் நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.