தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Feb 2026, 4:50 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆப் பாயில் சாப்பிட வேண்டாம்; அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, பிப். 10 - சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல்  பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக, திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்! நியாய விலைக்கடை ஊழியர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, பிப். 10 – நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் எம். துரைசாமி தலைமையில், சென்னையில் செவ்வாயன்று (பிப்.12) நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில், 11 சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி பொது விநியோகத் திட்டத்தினை தனித்துறையாக அறிவிக்க வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய  வேண்டும், மொத்த விற்பனை பண்டகசாலை ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில்  12(3) ஒப்பந்தம் செய்ய வேண்டும், தேர்வுநிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்க பதிவாளர் பரிந்துரைப்படி உடனடியாக அரசாணையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூய்மைப்  பணியாளர்கள் பிரச்சனையில் சுமூக தீர்வு

சென்னை, பிப். 10 –  சென்னையில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்ட லங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கி யதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வழக்கில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உழைப்போர் உரிமை இயக்கம் மாநகராட்சியுடன் உடன்பாடு எட்டியதை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 2028-இல் தான் முடிவடையும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப். 10 - மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணி 2028 இறுதியில்தான் முடிவடையும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுரை எய்ம்ஸ் கட்டு மானப் பணி முடியும் நிலையில் இல்லை  என்றும், தற்போது ஒரு பிளாக் மட்டுமே கட்டப்பட்டு வருவதாகவும்; முழுப் பணி களும் 2028 இறுதியில் தான் முடிவடை யும் என்று ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிறுவனம் தெரிவித்துள்ள தாகவும் கூறியுள்ளார். இருப்பினும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதலமைச்சரின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு இராமநாத புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டடத்தைப் பார்க்காமலேயே மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறும் நிலையில் ஒரு தொகுதி மாணவர்கள் உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையில்  9 பேருக்கு பணி

நியமனம் சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடைபெற்ற தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கு உதவி சுற்றுலா  அலுவலர் நிலை 2 பத விக்கான நியமன ஆணையை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் வழங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.