தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறு நாள் வேலை உறுதி சட்டத்தை சிதைக்காதே!

30 Jan 2026, 5:56 pm
நூறு நாள் வேலை உறுதி சட்டத்தை சிதைக்காதே!

நூறு நாள் வேலை உறுதி சட்டத்தை சிதைக்காதே!

உடுமலை, ஜன.30- கிராமப்புற மக்களின் வாழ்வாதர மாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை சிதைக் கும் வகையில் ஒன்றிய மோடி அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று, தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கங் கள் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பெயரில் நடை முறையில் இருந்த வேலை உறுதி சட் டத்தில் ஒன்றிய மோடி அரசு திருத்தம் செய்யும் வகையில் திட்டத்தில் இருக் கும் காந்தியின்  பெயர் மற்றும் சட்டத்தை  சிதைக்கும் வகையில் திருத்தம் செய்  துள்ளதை ரத்து செய்ய வேண்டும். நூறு நாள் வேலை கேட்டு அட்டை வைத்தி  ருக்கும் அனைவருக்கும் தொடர்ச்சி யாக வேலை வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 ஆகவும், நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் தர வேண்டும். பேரூ ராட்சி பகுதிகளிலும் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை நேரத்தை குறைத்து முழுமையான வேலை தர  வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு இயக்கங்களில் ஈடுபட்டனர். உடுமலை குட்டை திடலில் இருக் கும் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மத நல்லிணக்க உறுதி மொழி எடுக்கபட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி  அலுவகத்தின் முன்பு போராட்டம் நடை பெற்றது. நிறைவாக கோரிக்கை குறித்து உடுமலை வட்டரா வளர்ச்சி அலுவலரிடம் மனு தரப்பட்டது. இப் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலா ளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் ரங்க ராஜ் தலைமை தாங்கினார். மடத்துக் குளம் தாலூகா தலைவர் மாசானம், குடி மங்கலம் ஒன்றியத் தலைவர் வல்பூ ரான், உடுமலை ஒன்றியப் பொருளாளர் வஞ்சிமுத்து முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டச் செயலாளர் பஞ்ச லிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் கனக ராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். தருமபுரி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி.பாண்டியம்மாள் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி, மாவட்ட துணைச்செயலாளர் சி.ராஜா பேசினார். இதில் சிபிஎம் வட் டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ்,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி, துணைச்செயலாளர் ரவி, நகரச் செயலாளர் அலேக்ஸ்சாண் டர், விவசாயிகள் சங்க வட்டச் செயலா ளர் பி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒன்றியத்தில் 23 கிராமங்க ளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி பெரியம்மாள் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.சக்திவேல் துவக்கவுரையாற்றி னார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.நடேசன், நிர்வாகிகள் துளசிமணி, தம்பிதுரை, கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முறைகேடு: ஆட்சியரிடம் சிபிஎம் புகார்

நாமக்கல் அருகே புதுச்சத்திரம் ஒன்றியம் ஏலூர் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறை கேடு நடப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதிமணி மனு  அளித்தார். அம்மனுவில், ஏலூர்  ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு  திட்டத்தில், பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அனைவருக்கும் முழு மையாக பணிகள் வழங்காமல் ஒரு சிலர் பெயரில் அட்டைகளை பதிவு செய்து, வேலை செய்யாமலே அவர் கள் கணக்கில் வரவு வைத்து ஏமாற்றி முறைகேடு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது மேலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு போது மான சம்பளத்தை வழங்காமல் அதி காரிகள் காலம் தாழ்த்தி வருகின்ற னர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியபோதும் நடவ டிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் 10 வாரங்களாக ஊராட்சி யில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு சம்பளமும் வழங்காமல் உள் ளனர். அதனை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.