உத்தமதானபுரம் கிளை நூலகத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>உத்தமதானபுரம் கிளை நூலகத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கல்</strong></p>
<p>பாபநாசம், நவ.16- 58 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, பாபநாசம் அருகே உத்தமதானபுரம் கிளை நூலகத்திற்கு ரூ.30,000 மதிப்பிலான நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமதானபுரம் தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா நினைவு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் அன்பழகன் வரவேற்றார். ஓய்வு தேசிய நல்லாசிரியர் கலைச் செல்வன், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் துரைசாமி, செயலாளர் தயாநிதி, உத்தமதானபுரம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை குளோரி, கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார், திருவாரூர் மாவட்டக் கிளை நூலகர்கள் ஆசைத் தம்பி, கதிரவன், அன்பரசு, ராகவன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். உத்தமதானபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் உ.வே.சா குறித்துப் பேசினர். சென்னை உ.வே.சா நூலக காப்பாட்சியர் பேராசிரியர் சுயம்பு சிறப்புரையாற்றினார். ஆவுடையப்பன் நூல்களை வழங்கி, ஏற்புரையாற்றினார். கிளை நூலகர் பாண்டியன் நன்றி கூறினார். சுயம்பு, செங்கதிர்ச் செல்வன், கலைச் செல்வன் தலா ரூ.1,000 கிளை நூலகத்திற்கு வழங்கி, புரவலர்களாக இணைந்தனர். புதிய புத்தக அடுக்கிற்கு ஆவுடையப்பன் ரூ.4,000, மகர பூஷணம் ரூ.3,000 நன் கொடை வழங்கினர்.</p>
<p> </p>
