அரசு கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
12 Mar 2026, 4:20 pm
<p><strong>அரசு கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு</strong></p>
<p>அறந்தாங்கி, மார்ச் 12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்திற்கு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் கல்லூரிக் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் ஸ்ரீபாஸ்கரனுக்கு ஒன்றிய அரசு மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் தனக்கு வழங்கபட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 61 நூல்களையும் கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் கல்லூரிக் கணினி அறிவியல் துறைத் தலைவருமான முனைவர் து.சண்முகசுந்தரம் அவரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் மற்றும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் க.மேகலா (பொ), கல்லூரி ஆங்கிலத் துறை விரிவுரையாளர் முனைவர் ரா.அபிராமி, கண்காகாணிப்பாளர் பா.மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
