தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மடிக்கணினி எங்களுக்கில்லையா? முதுகலை மாணவர்கள் ஆதங்கம்

13 Jan 2026, 3:17 pm
மடிக்கணினி எங்களுக்கில்லையா? முதுகலை மாணவர்கள் ஆதங்கம்
<p><strong>மடிக்கணினி எங்களுக்கில்லையா? முதுகலை மாணவர்கள் ஆதங்கம்</strong></p> <p>தமிழக அரசு உயர்கல்வி பயி லும் மாணவர்களுக்காக தொடங்கியுள்ள &lsquo;உலகம் உங்கள் கையில்&rsquo; மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், ஒரே கல்வி ஆண்டில் &nbsp;பள்ளிப் படிப்பை முடித்த மாண வர்களிடையே கால அளவு அடிப் படையில் வேறுபாடு காட்டப்படுவ தாகப் புகார் எழுந்துள்ளது. குறிப் பாக, தற்போது முதுகலை முத லாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட் சம் மடிக்கணினிகள் வழங்கும் திட் டத்தைத் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ், தற்போது கல்லூரி களில் இறுதியாண்டு பயிலும் &nbsp;மாணவர்களுக்கு மடிக்கணினி கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 2021-22 ஆம் கல்வி யாண்டில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடையேதான் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த ஆண்டில் பள்ளி முடித்து பொறி யியல், மருத்துவம், கட்டிடக்கலை உள்ளிட்ட நான்காண்டு படிப்புக ளில் சேர்ந்த மாணவர்கள் தற் போது (2025-26) இறுதியாண்டு பயில்கின்றனர். இதனால் அவர் கள் மடிக்கணினி பெறத் தகுதியு டையவர்களாக உள்ளனர். அதே 2021-22 கல்வியாண்டில் பள்ளி முடித்து பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. போன்ற மூன்றாண்டு &nbsp;படிப்புகளைத் தேர்ந்தெடுத்த மாண வர்கள், கடந்த 2025 மே மாதத்தி லேயே பட்டப்படிப்பை முடித்து விட்டனர். தற்போதைய திட்ட வழி காட்டுதலின்படி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட் டுமே முன்னுரிமை அளிக்கப்படுவ தால், பட்டம் பெற்று வெளியேறிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் இச்சலுகையைப் பெற முடியாமல் போயுள்ளனர். மூன்றாண்டு படிப்பை முடித்த மாணவர்களில் கணிசமானோர் தற்போது எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி. போன்ற &nbsp;முதுகலைப் படிப்புகளில் சேர்ந் துள்ளனர். இவர்களுக்கும் மடிக் கணினித் திட்டம் பொருந்தாது என்பதால் மாணவர்கள் கவலை யடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த முதுகலை மாணவர் ஒரு வர் கூறுகையில், &ldquo;எனது பாடப் பிரிவிற்கு மேட் லேப் (MATLAB), சி++, ஜாவா மற்றும் தரவு பகுப் பாய்வு (Data Analytics) போன்ற மென்பொருள்களைப் பயன்ப டுத்த மடிக்கணினி அத்தியாவசிய மானது. என்னுடன் பள்ளி முடித்து விட்டு பொறியியல் சேர்ந்த நண் பர்களுக்கும், எனக்குப் பின்னால் பள்ளி முடித்தவர்களுக்கும் மடிக் கணினி கிடைக்கிறது. ஆனால், முதுகலை பயிலும் எங்களுக்கு அது மறுக்கப்படுவது வருத்தமளிக் கிறது,&rdquo; என்றார். இதுகுறித்து கல்வித் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகை யில், &ldquo;இப்போதைய திட்டம் உயர் கல்வித் துறையின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. முதற்கட்ட மாகப் பொறியியல் மற்றும் மருத்து வப் படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் பயிலும் இறுதி யாண்டு மாணவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படுகிறது. முது கலை மாணவர்களுக்கு அடுத்த டுத்த கட்டங்களில் மடிக்கணினி வழங்கப்பட வாய்ப்புள்ளது,&rdquo; எனத் தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். இதில் 40 சதவீதத்திற்கும் அதிகமா னோர் கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்ற னர். எனவே, 2021-22-ல் பள்ளி முடித்து தற்போது முதுகலை பயி லும் மாணவர்களையும் இத்திட்டத் தில் இணைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கென தனிச்சிறப்பு &nbsp;வழிமுறையை உருவாக்க வேண் டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.