சாகித்ய அகாடமியின் தன்னாட்சியைப் பறிக்காதே! சென்னையில் தமுஎகச சார்பில் படைப்பாளிகள் கண்டனக் குரல்!
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சாகித்ய அகாடமியின் தன்னாட்சியைப் பறிக்காதே! சென்னையில் தமுஎகச சார்பில் படைப்பாளிகள் கண்டனக் குரல்!</strong></p>
<p>சென்னை, ஜன.27 - சாகித்ய அகாடமியின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர் பட்டியலை வெளியிட விடாமல் தடுத்து, அதன் தன் னாட்சி அதிகாரத்தில் தலையிடும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் (தமு எகச) சார்பில் சென்னையில் ஜன.24 அன்று கண்டனக் கருத்தரங்கம் நடை பெற்றது. அமைப்புகளை முடக்கும் முயற்சி கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த தமுஎகச துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா, “ஒன்றிய அரசு 24 மொழிப் படைப்பாளிகளையும் தேர்வுக் குழுவை யும் அவமதித்துள்ளது; அகாடமிகளைப் பாதுகாக்க அகில இந்திய அளவில் கூட்டு இயக்கம் உருவாக்கப்படும்” என்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தா ளர் சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், “பன்மைத்துவத்தைச் சிதைக்கப் பார்க்கும் ஒன்றிய அரசு, கலாச்சாரத் துறை மூலம் அகாடமியின் தன்னாட் சிக்குச் சவக்குழி வெட்டுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பப்படும்” என உறுதி யளித்தார். படைப்பாளிகளின் குற்றச்சாட்டு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசு கையில், “அரசியல் தலையீடின்றி விருது கள் வழங்கப்படுவதே இலக்கியத்திற்குப் பெருமை. ஒன்றிய அரசால் புறக்கணிக்கப் பட்ட 24 மொழிப் படைப்பாளிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கித் தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். எழுத்தாளர் கவிதா முரளிதரன், வரலாற்றை மாற்றி எழுதவும் எழுத்தாளர்களை அச்சுறுத்தவும் அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டினார். தன்னாட்சிக்கான போராட்டம் ஓவியர் அ.விஸ்வம், லலித்கலா அகா டமியின் முடக்கம் குறித்தும், நாடகவிய லாளர் பிரளயன் தேசிய நாடகப் பள்ளி யில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசி னர். தமுஎகச பொதுச் செயலாளர் களப்பி ரன், இந்தியா ஒற்றுமையாக இருக்க அனைத்து மொழிகளையும் அரசு வளர்க்க வேண்டும் என்றும், இதற்காகத் தேசிய அளவிலான எதிர்ப்பு இயக்கம் முன்னெடுக் கப்படும் என்றும் தெரிவித்தார். கருத்தரங்கில் எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், கருணாபிரசாத், கவின்மலர் உள்ளிட்ட பலர் பங்கேற்று, இலக்கிய அமைப்புகளுக்கும் ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறைக்கும் இடையே போடப்பட்டுள்ள ரகசியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தன் னாட்சியைப் பாதுகாப்பதே இந்திய இலக்கிய மரபைப் பாதுகாப்பதாகும் எனப் படைப்பாளிகள் ஒருமித்த குரலில் முழங்கி னர்.</p>
