தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை திணிக்காதே

11 Mar 2026, 4:32 pm
காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை திணிக்காதே

காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை திணிக்காதே

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 11- நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் உள்ள நிலையில், டாஸ் மாக் ஊழியர்களுக்கு மனவுச்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் நிர்வா கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதனன்று கோவை ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மது உற்பத்தி நிறுவனங்களே ஈபிசி ஸ்டிக்கர்களை மது பாட்டில் களில் ஒட்டுவதை உறுதி செய்திட  வேண்டும். தனியார் முகமைகள் மூலம் காலி மது பாட்டில்கள் சேக ரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நட வடிக்கை குழு சார்பாக புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் ஜான் அந் தோணி ராஜ் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்பிரபு, மாவட்டப் பொருளா ளர் ராமகிருஷ்ணன், ஏஐடியுசி மாநில துணைச் செயலாளர் சர வணன், விற்பனையாளர் நல சங்க  மாநில இணை அமைப்பாளர் மதிய ழகன், அரசு பணியாளர் சங்க மாநில  துணைத்தலைவர் ராமானுஜம், கடை மேற்பார்வையாளர் சங்க மாவட்டத் தலைவர் மருதமுத்து, பாட்டாளி தொழிற்சங்க சார்பில் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.  முன்னதாக, ஈபிசி ஸ்டிக்கர் களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த  முயற்சித்தனர். அப்போது ஆவேச மடைந்த தொழிலாளர்கள் ஆட்சி யர் அலுவலக வாயில் முன்பு  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சிய ரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவினை அளிக்க அழைத்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.