முந்தய பக்கம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்வு

7 Jun 2026, 9:11 pm
வீட்டு உபயோக சிலிண்டர்  விலை மேலும் ரூ.29 உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்வு

சென்னை, ஜூன் 7 - வீடுகளில் பயன்படுத்தப் படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஞாயிறன்று (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதி கரித்து வருவதால், அர சுக்குச் சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவ னங்கள் திணறி வருகின்றன. இ

தன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் இரண்டா வது முறையாக வீட்டு உப யோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.

இதன்படி, வீட்டு உப யோக சமையல் எரிவாயு சிலி ண்டரின் விலை சென்னை யில் ரூ.928.5-இல் இருந்து ரூ.957.5 ஆகவும், தில்லியில் ரூ.913-இல் இருந்து ரூ.942 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிக்கப் பட்டது. (மேலும் விபரம் 2)

Share
FacebookXWhatsAppTelegram