முந்தய பக்கம்

மாமதுரைக்குத்  தேவை வளர்ச்சியா; மதவெறி அரசியலா? முதல்வர் கேள்வி

5 Dec 2025, 4:21 pm
மாமதுரைக்குத்  தேவை வளர்ச்சியா; மதவெறி அரசியலா? முதல்வர் கேள்வி
<p><strong>மாமதுரைக்குத் &nbsp;தேவை வளர்ச்சியா; மதவெறி அரசியலா? முதல்வர் கேள்வி</strong></p> <p>சென்னை, டிச. 5 - திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை, அரசியல் பிரச்சனையாக்கி ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதி விட்டுள்ளார். அதில், &ldquo;மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது &hellip;&hellip;&hellip;.. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!&rdquo; என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பதிவை வர வேற்று, சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். &nbsp;அதில், &ldquo;அமைதி தவழும் தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்ற அனுமதியோம். மதுரை எப்போதும் அன்பின் பக்கம், அமைதியின் பக்கம், வளர்ச்சியின் பக்கமே!&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram