தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள்!

18 Mar 2026, 3:34 pm
உங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள்!
<p><strong>உங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள்!</strong></p> <p>நடைபெறவுள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பித்து, தங்குதடையின்றி வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அடையாள அட்டை கட்டாயம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்குச் சாவடிக்கு வரும்போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) கட்டாயம் கொண்டு வர வேண்டும். மாற்று அடையாள ஆவணங்கள் ஒருவேளை உங்களிடம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லையென்றால், பதற்றப்படத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து நீங்கள் வாக்களிக்கலாம்: &bull; ஆதார் அட்டை &bull; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அடையாள அட்டை (MGNREGA) &bull; புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள் &bull; தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் &nbsp;வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை &bull; ஓட்டுநர் உரிமம் (Driving License) &bull; வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card) &bull;தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் வழங்கப்பட்ட திறனட்டை (Smart Card) &bull; இந்தியக் கடவுச்சீட்டு (Passport) &bull; புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் &bull; ஒன்றிய/மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் &bull; நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் &bull; மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card) முக்கியக் குறிப்புகள் வாக்காளர் தகவல் சீட்டு : தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் &lsquo;வாக்காளர் தகவல் சீட்டு&rsquo; (Voter Information Slip) உங்கள் வாக்குச் சாவடியை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படும். இது அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் : 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களின் அசல் கடவுச்சீட்டை (Original Passport) மட்டுமே அடையாளச் சான்றாகக் காண்பிக்க வேண்டும். பட்டியலில் பெயர் &nbsp;: உங்களிடம் அடையாள அட்டை இருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர் ஆவீர்கள். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள &nbsp;செய்திக்குறிப்பின் அடிப்படையில்...</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.