பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வு</strong></p>
<p>சென்னை, நவ. 15- இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த ‘தலித் சுப்பையா’ எனும் ஆவணப் படம் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், பிற இயக்குநர்களின் இயக்கத் தில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் ஆகிய படங்களையும் தயாரித் திருந்தார். மறைந்த முற் போக்கு பாடகரும், எழுத் தாளருமான தலித் சுப்பை யாவின் வாழ்க்கையை மைய மாகக் கொண்டு கிரிதரன் இயக்கிய, இசை ரீதியான ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருந்தார். ‘தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபல்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங் கேற்கத் தேர்வாகியுள்ளதாக, நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபல்ஸ்’ ஏற்கனவே, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில், சிறந்த முழு நீள ஆவணப்படம் எனும் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.</p>
