ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து மருத்துவர்கள் தர்ணா
11 Nov 2025, 3:41 pm
<p><strong>ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து மருத்துவர்கள் தர்ணா</strong></p>
<p>நாமக்கல், நவ.11- பழைய மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்து, புதிய மருத் துவமனைகளுக்கு மருத்துவர்கள் நியமித்தலை எதிர்த்து மருத்துவர்கள் மருத்துவமனை முன்பு கருப்புப் பட்டை அணிந்து தர்ணாவில் ஈடுபட்ட னர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரியில் 11 புதிய மருத்து வக் கல்லூரிகளிலும், நான்கு பழைய மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியிலுள்ள மருத்துவர்கள் பணியிடங்களை ஆட் குறைப்பு செய்து புதிதாக திறக்கப் பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி உத்தரவு செய்து சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதி தாக துவக்கப்படும் மருத்துவமனை களுக்கு மருத்துவர்கள், செவிலியர் கள் மற்றும் பிற பணியாளர்கள் பணி யிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை. சென்னை, கோவை, சேலம், திரு நெல்வேலி, மதுரையிலுள்ள மருத்து வக் கல்லூரிகளில் கட்டிடங்கள் கட் டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கட்டி டங்களில் துறைகளை ஆரம்பிப்ப தற்கு எந்த ஒரு பணியிடமும் இது வரையில் உருவாக்கப்படாமல் உள் ளது. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர் கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக் கப்படுகிறார்கள். அதேபோன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவம னையிலும், பெரியார் நகர் மருத்துவ மனையிலும் எந்த ஒரு பணியிடங்க ளும் உருவாக்கப்படாமல் பிற மருத் துவமனைகளில் ஆட்குறைப்பு செய் யப்பட்டு இங்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்து வர்கள் மருத்துவமனை முன்பு செவ் வாயன்று தர்ணா நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். இதில் 100 க்கும் மேற் பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்ட னர். இதனால் மருத்துவமனை பணி கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அடுத்தும் அரசு ஆள் குறைப்பு வேலையை கைவிடவில்லை என்றால் மருத்து வமனை புறக்கணிப்பு மற்றும் வெளி நோயாளிகள் பார்க்கும் பிரிவு அவ சர பிரிவு ஆகிய வற்றில் பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடு வோம் என மருத்துவ சங்க மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி இதேபோன்று, நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டப் பொரு ளாளர் தன்ராஜ், நிர்வாகிகள் நளினி, நித்யா உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
