சென்னை விரைவு செய்திகள்
8 Jun 2026, 1:29 am

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 7- மருத்துவக் கல்வியில் படிப்படியாக மாநில உரிமைகளைப் பறிக்கும் உச்ச நீதி மன்றம் மற்றும் ஒன்றிய அரசின் போக்கு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், இதில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலை யிட்டு மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற் கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வலி யுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைமுறையில் இருந்தது போல, 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ இடங்க ளையும் மாநில அரசிடமே மீண்டும் ஒப்ப டைக்க வேண்டும் என்றும், நீட் தேர்விலி ருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க ஏது வாக என்.எம்.சி சட்டத்தில் உரிய திருத்தங் களைக் கொண்டுவர ஒன்றிய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு மோசடி களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், குளறுபடிக ளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் பொது த்துறை நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய மருந்துகளைத் தரமாகவும் குறைந்த விலை யிலும் நேரடியாக உற்பத்தி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரூ.40 கோடியில் நவீன விளையாட்டு அரங்கம்!

சென்னை,ஜூன் 7- தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலை அருகே 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அறி வித்துள்ளது. 4,000 பார்வை யாளர்கள் அமரக்கூடிய இந்த பிரமாண்ட வளாக த்தில் கால்பந்து மைதானம், தடகளப் பாதை, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் மைதானங் கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரத்திலான வசதிகள் இடம்பெறவுள் ளன. இந்த அரங்கம் மூலம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளை நடத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தாம்பரம் மாநக ராட்சி ஆணையர் எஸ்.பால ச்சந்தர் கூறுகையில், “கல்வி மற்றும் விளையாட்டு வசதி களை மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கம்; இந்த விளையாட்டு வளா கம் தாம்பரத்தை ஒரு சிறந்த விளையாட்டு மையமாக மாற்றுவதோடு, இளை ஞர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்கவழங் ்கங்களில் சிக்காமல் ஆக்கப் பூர்வமான பாதையில் செல்ல பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

ப்பேட்டைராணிப்பேட்டை அரசுப் பள்ளிகளில் முறைகேடான கட்டண வசூல்

ராணி, ஜூன் 7- மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1,500 வரையிலும், மாற்றுச் சான்றிதழுக்கு ரூ.500 வரை யிலும் விதிகளை மீறிப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த வசூல் வேட்டை அதிகளவில் நடப்ப தாகவும், பள்ளிக்கு வரும் அரசு நிதியை ஆய்வக உதவியாள ரின் தனிப்பட்ட வங்கித் கணக்கிற்கு அனுப்பி முறைகேடு செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். மேலும், இப்பள்ளியில் மைதானமே இல்லாத சூழலில் 3 உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, பழுதடைந்த கழிவறைகள் எனப் பல்வேறு நிர்வாகக் குறை பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டுச் சம்பந்தப்பட் டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை காவல் நிலையங்களில் தூய்மைப்

பணி: ஆணையர் உத்தரவு! சென்னை,ஜூன் 7- சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜின் உத்தரவின் பேரில், நகரின் 105 காவல் நிலையங்களிலும் சனிக்கிழமை காலை அதிரடி தூய்மைப் பணி மேற் கொள்ளப்பட்டது. அண்மையில் 19-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்ற ஆணையர், காவலர் களின் குறைகளைக் கேட்டறிந்ததைத் தொடர்ந்து இந்தத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், வழக்கமாக வியாழக்கிழமைகளில் நடைபெறும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் ஆய்வு நடைமுறை இனி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின்கீழ் தலா 105 சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு நிலையங்களும், 39 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

கல்வராயன் மலை மக்களின் முன்னேற்றத்திற்குத் தனி கவனம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கள்ளக்குறிச்சி, ஜூன் 7- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டு மானத்தில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட மைய நூலகப் பணிகளைப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் அறிவுறுத்தலின்படி கல்வராயன் மலைப்பகுதியில் கல்வி மேம்பாடு, குழந்தைத் திருமணத் தடுப்பு, புதிய மருத்து வமனை மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரி வித்தார். மேலும், அப்பகுதி பழங்குடியின இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க 200 வீரர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயிற்சி யாளர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப் படும் என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, அரசுச் செயலா ளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி!

சென்னை, ஜூன் 7- சோலிங்கநல்லூர் அருகே உள்ள கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஆயிரக்கணக் கான குடும்பங்கள் கடந்த நான்கு மாதங் களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையுடன் குடிப்பதற்கு லாயற்றதாக இருப்பதால், இங்குள்ள இருபதாயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தண்ணீரையே முழு மையாக நம்பியுள்ளனர். பொதுத் தொட்டி களில் சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த நீர், தற்போது மிகக் குறைந்த அழுத்த த்துடன் வருவதால் விநியோகத்தில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. பத்து ஆண்டுகள் பழமையான குழாய்கள் மற்றும் இறைப்பான்களே இந்த குறைந்த அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். மேலும், மேல்நிலைத் தொட்டிகளின் மூடி கள் சரியாக மூடப்படாததால் தண்ணீர் மாசடைந்து, பயன்பாட்டிற்குப் தகுதி யற்றதாக மாறுவதாகவும், இதனால் சாலை யோரக் குழாய்களில் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் இல்லத் தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வழங்கப்படுவதாகக் கூறப்படும் முப்பத்தைந்து முதல் நாற்பது லட்சம் லிட்டர் தண்ணீர் தங்களைச் சென்றடைவ தில்லை என ஐயம் தெரிவிக்கும் மக்கள், எழில் நகரில் புதிய குடிநீர்த் தொட்டி கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பதினெட்டு கோடி ரூபாய் பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை என்றும் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குழாய்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் தண்ணீர் கிடைக்க ஒழுங்குபடுத்தும் வால்வு களைப் பொருத்துமாறு வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள் ளதாகவும் தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சனை காரணமாகப் புகார்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது காவல்துறை டிஜிபி உத்தரவு! சென்னை,ஜூன் 7- காவல் நிலைய எல்லைப் பிரச்சனையைக் காரணம் காட்டி பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்க மறுக்கக் கூடாது என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் அனைத்துக் காவல் அதிகாரி களுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறிப் புகார்களைப் பெற மறுக்கும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். குற்றச் சம்பவங்கள் நடக்கும் போது, அது எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்ற குழப்பத்தால் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருட்டு, கொள்ளை, விபத்து உள்ளிட்ட எந்தவொரு குற்றப் புகாராக இருந்தாலும் தாமத மின்றிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அது வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாக இருந்தால், புகார்தா ரரை அலையவிடாமல் காவல் துறையினரே சம்பந்தப்பட்ட நிலையத்திற்குப் புகாரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட நட வடிக்கைக்காகப் புகார்தாரருக்குச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்களை வழங்கி, உரிய ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 10-ல் இஎஸ்ஐசி குறை தீர்ப்பு முகாம்

சென்னை,ஜூன் 7- சென்னை நுங்கம்பாக்க த்தில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகத்தில், வரும் புதனன்று (ஜூன் 10) பிற்பகல் 2:30 மணியளவில் குறை தீர்க்கும் முகாம் நடை பெறவுள்ளது. தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் (காப்பீட்டாளர்கள்) உள்ளிட்ட இஎஸ்ஐசி பயனா ளிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எண்.143, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் என்ற முகவரியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களின் குறைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.