இளம் பெண் வயிற்றிலிருந்து 5.5 கிலோ கட்டி அகற்றம்: பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
12 Dec 2025, 2:40 pm
<p><strong>இளம் பெண் வயிற்றிலிருந்து 5.5 கிலோ கட்டி அகற்றம்: பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை</strong></p>
<p>பெரம்பலூர், டிச.12- பெரம்பலூரில், இளம்பெண் வயிற்றில் இருந்த 5.5 கிலோ கட்டியை அகற்றி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வயிற்று வலி மற்றும் வயிறு உப்பு சத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற, பெரம்பலுர் லட்சுமி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது வயிற்றில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, லட்சுமி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ஜெயலட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கருணாகரன், மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் தினேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்தரை கிலோ கட்டியை அகற்றினர். இளம்பெண் தற்போது நலமுடன் உள்ளார்.</p>
