தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சிரப்’ வகை மருந்துகளை வாங்க மருத்துவரின் சீட்டு கட்டாயம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

16 Jun 2026, 8:47 pm
‘சிரப்’ வகை மருந்துகளை வாங்க மருத்துவரின் சீட்டு கட்டாயம் ஒன்றிய சுகாதாரத்துறை  அமைச்சகம் உத்தரவு

‘சிரப்’ வகை மருந்துகளை வாங்க மருத்துவரின் சீட்டு கட்டாயம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

நாட்டில் இனி இருமல் மருந்து உட்பட எந்தவொரு திரவ (சிரப்) வடிவ மருந்தையும் மருத்துவரின் அதிகாரப்பூர்வ பரிந்து ரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக வாங்க முடியாது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு ‘மருந்துகள் (5ஆவது திருத்த) விதிகள், 2026’ (Drugs (5th Amendment) Rules, 2026) மூலமாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள் ளது. இதற்காக, இந்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவு டன் (DTAB - Drugs Technical Advis ory Board) விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, மருந்து கள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் (Drugs and Cosmetics Act, 1940) பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில், “இதுவரை வீட்டு உபயோக சாதாரண மருத்துவப் பொருட்களின் (Over-the-Counter - OTC) வரிசையில் இடம் பெற்றி ருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகா ரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த அனைத்து வகையான திரவ மருந்துகளும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்கு முறைப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்க ளிலும் உள்ள மருந்தகங்கள் இந்த புதிய விதிமுறையை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். மருத்துவர் சீட்டு இல்லாமல் சிரப் வழங்கினால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்” என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.