உச்சுக் கொட்டிட்டு கடந்துபோவது சமூகப்பணி ஆகாது! ஒரு மருத்துவரின் மனக்குமுறல்!
30 May 2026, 10:34 pm

உச்சுக் கொட்டிட்டு கடந்துபோவது சமூகப்பணி ஆகாது! ஒரு மருத்துவரின் மனக்குமுறல்!

ஒரு வார காலம் உடல்நிலை சரியில்லை. என் இயல்பான பணிகளை எப்போ தும் இருக்கும் வேகத்துடன் செய்ய முடியாமல் சற்றே பொறுமையாகச் செய்து கொண்டு இருந்தேன். இருப்பினும் முடங்கி விடவில்லை, இயங்கிக்கொண்டே இருந் தேன் மூச்சிறைக்க.

ஒரு சில தினங்கள் முன்பு பணியில் மும்முர மாக இருக்கும் போது(high risk pregnancy cases புறநோயாளி பிரிவில் பார்க்கும் போது) பெண் காவலர் ஒருவர் நான் பார்த்த பழைய பாலியல் வன்புணர்வு ஒன்றிற்கு ஒப்பீனியன் (opinion) வாங்கினார்.

கூடவே 25/5/2026 உங்களுக்கு போக்சோ கோர்ட் டூட்டி (pocso court duty) இருக்கு என சம்மன் கொடுத் தார், கேஸ் டீடெய்ல்ஸ் (case details) கொடுத் தார்.வாங்கிக்கொண்டேன்

. பிறகு நான் op cases பார்த்துட்டு இந்த, போக்சோ கோர்ட் கேஸ் (pocso court case)ல நான் பார்த்த விஷயங்களை எல்லாம் படிச்சுட்டு என் பை யில் வச்சுக்கிட்டேன். என் எண்ணம் எல்லாம் எப்படியேனும் இந்த வழக்கில் நாம் 25/5/2026 ஆஜராகி சாட்சி சொல்ல வேண்டும் என்று மட்டும் இருந்தது. இதுக்காகவே நம் உடல்நிலையை தேற்ற வேண்டும் சிக் லீவ் (sick leave) போட்டுட கூடாது என இருந்துச்சு. ஏனெனில் 2016ல நான் பார்த்த சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு.

இது நீதிமன்றம் வர 10 ஆண்டுகள் ஆகி இருக்கு, நாம வாய்தா வாங்க கூடாது என மனசுக்கு தோணுச்சு(எவ்வளவு முடியாம இருந்தாலும் என்னால் ஒரு வழக்கு வாய்தா வாங்கக்கூடாது என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பவள்). காவலரை காணவில்லை ஓரளவு உடல்நிலை தேறினேன். இருப் பினும் மூச்சு வாங்கத் தான் செய்தது. ஒருங்கி ணைந்த திருவள்ளூர் நீதிமன்றம் பெரியது.

அங்கு போக்சோ கோர்ட் ஹால் இதுவரை நான் அட்டன் attend பண்ணல, எல்&ஓ அட்டன் (L&O attend) பண்ணி இருக்கேன், மகிளா அட்டன் (mahila attend) பண்ணி இருக்கேன், ஆனால் போக்சோ இன்னும் அந்த வளாகத்தில் attend பண்ணல, அதனால் அங்கு வந்தபின் தொடர்பு கொள்கிறேன். என்னை போக்சோ கோர்ட் ஹால் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போங்க எனச் சொல்லி நேற்றே இந்த வழக் கோடு தொடர்புடைய காவலரிடம் சொல்லி இருந்தேன்.

இன்று நீதிமன்றம் சென்றபின் அந்த பெண் காவலரை தொடர்பு கொள்கிறேன், அவர் அசரவே இல்லை. என்னை அறிந்தவர்கள் அறிவர். ஒரு நிகழ்ச்சி நடக்கிற நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அந்த இடத் திற்கு நான் செல்பவள் என்று.

இன்றும் 11மணிக்கு சென்றேன்(என்னை வரச் சொன்ன நேரம் 11.30am). 11 மணியில் இருந்து அழைக் கிறேன் அந்த பெண் காவலர் அழைப்பை எடுக் கல. நானே கேட்டு கேட்டு போக்சோ கோர்ட் ஹால் வாசல் வரை சென்றுவிட்டேன்.

மே பீ (May be) அங்கு வெளியே நின்ற வழக் கறிஞர் சிலருக்கு என்னை தெரிந்து இருக் கலாம். “நீங்க ...., கேஸ் பாக்குற டாக்டர் தானே, பொன்னேரி தானே “என்றார்கள். ஆமாம்னு சொல்லிட்டு அமைதியா இருந்துட்டேன். பெரும்பாலும் கோர்ட்ல தெரியாத வழக் கறிஞர்களிடம் பேசுவதில்லை நான். காரணம் அவங்க யார் பக்க வழக்கறிஞர், சிறுமி பக்கமா, சீரழித்தவன் பக்கமா என தெரியாது, அதனால் நாம் எந்த டிஸ்கஸ்னும் மாண்பமை நீதி அரசர் முன்னிலையில் தான் வச்சுக்க வேண்டும் என்பது எனக்கு நான் வைத்திருக்கும் நெறி. மயக்கம் வருவது போலிருந்தது எல்லாரும் வராங்க.

வரவேண்டிய பெண் காவலரை காணோமே என வருந்தி நின்றேன். சற்று மயக்கமும் வருவதுபோல் இருந்தது.

அந்த இடத்தில் குடிக்க நீரும் இல்லை (ஆஸ்பத்திரில தண்ணி இல்லைனா மட்டும் கேட்குறீங்க தானே, கோர்ட்லயும் பொது மக்கள் குடிக்க கோர்ட் ஹால் வாசலில் தண்ணி வைக்க ஏன் யாரும் கேட்க மாட்டேங்க றீங்க??). கையப்பிடிச்சு இழுத்துப் போகணுமா? கொஞ்சம் உட்கார ஒரு இடம் கிடைத்தது கோர்ட் வாசலில். உடனே உட்கார்ந்தேன்.உடனே காவல் ஆய்வாளருக்கு அடிச்சேன்.

எங்க உங்க பெண் காவலர் என்றேன், நான் மயக்கம் போட்டு விழுவதற்குள் வரச் சொல்லுங்களேன் என்றேன்.

இது நடக்கும் போது பெண் காவலர் வந்தார், ஆய்வாளர் தொலைபேசியை அவரிடம் கொடுக்க சொல்லி பேசினார், டாக்டர் சாட்சி சொல்ல வந்து இருக்காங்க, அவர்களை நீங்க ரிசீவ் பண்ணி உட்கார வைங்க என்று தான் சொன்னார்கள், உடனே இந்த பெண் காவலர் மரியாதை என்பது துளியும் இல்லாத அளவிற்கு ஆய்வாளர் அவர்களிடம் பேசினார்,”ம்ம்ம் நீங்க வாங்க, நீங்க வந்து பாருங்க.

அப்ப, கோர்ட” “கோர்ட் டுக்கு வந்தாச்சுனா கோர்ட் ஹால் உள்ள வந்து உட்கார வேண்டும் டாக்டர், நான் என்ன கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டா போய் உட்கார வைக்க வேண்டும்” என்றார். சத்த மாக இதை சொன்னார். நான் அங்கு, என் சீருடையில்(white apron) இருக்கிறேன்.எல்லார் முன்பும் சத்தமாக இதை சொன்னார். சொல்லிட்டு அவர், கோர்ட் ஹால் உள்ள போயிட்டார்.

நான் தயங்கித் தயங்கி உள்ளே போனேன். ஏனெனில் வேறு ஒரு வழக்கு நடக்கும்பட் சத்தில் நாம் உள்ளே போய் நிற்பது அறம் அல்ல.

ஆகையால் அப்போதும் தயங்கியே உள்ளே போய் அமர்ந்தேன்.

அப்ப தான் சம்மன் பார்க்கிறேன். ஏகப்பட்ட வாய்தா வந்திருக்கு.ஏன் வாய்தா? ஏனெனில் மருத்துவர் வரல? ஆடிப்போனேன் அந்த நேரம்.

அதுக்கு முன்பு கூட சகிப்புதன்மையோடு இருந்தவள் இப்ப செம கடுப்பில் இருந்தேன். நீதிபதியிடம் வேண்டுகோள் கூண்டில் ஏற்றினார்கள்.

சாட்சி சொன் னேன். இறுதியில் வேறு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என மாண்பமை நீதிபதி கேட்க “ஆம் மேடம்” என்றேன்.

சொல்லுங்க என்றார். இன்று இப்ப நான் நிற்கும் இந்த வாய்தாவிற்கு எனக்கு சம்மன் வழங்கப்படவில்லை மேடம், 10ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு நீதிமன்றம் வருது, அதனால் தான் நான் சம்மன் இல்லை எனினும் கூண்டில் ஏறினேன் என்றேன். அதெப்படி உங்களுக்கு நாங்க எழுதி இருக்கோமே என்றார் மாண்பமை நீதியரசர்

. கோர்ட் எழுதி இருந்தாலும் காவலர்கள் எனக்கு அதை தெரியப்படுத்தல என்றேன்.

எனக்கு இப்ப கொடுக்கப்பட்டு இருக்கும் கட்டில் இருக்கும் சம்மன் எல்லாம் பழைய தேதியிட்ட சம்மன், அதை அப்பவே எனக்கு சர்வ் (serve), பண்ணி இருந்தால் இந்த வழக்கு என்றோ முடிந்து இருக்கும், இதில் அலட்சியம் காட்டிய காவல்துறை மீது எனக்கு வருத்தம் இருக்கு, மூச்சு விட கஷ்டப்பட்டு கொண்டும் நான் வந்து நிற்கிறேன் இங்கு, ஏன் இவங்க இப்படி இருக்காங்க என கூண்டில் இருக்கும் போதே கேட்டேன்.

சம்மன் கொடுக்கலையா? கோபப்பட்ட நீதிபதி இதுக்கு முன்னாடியும் இந்த வழக்கில் நீங்க சம்மன் கொடுக்கலையா டாக்டருக்கு என கோபமாக கேட்டார் மாண்பமை நீதியரசர். இல்லை மேடம் இவரை தொடர்பு கொள்ள முடியல என்றார் அந்த காவலர்.

இன்னும் நான் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறேன், என்னை எப்படி தொடர்பு கொள்ள முடியாமல் போனது மேடம் என கேட் டேன் நான். போக்சோ வழக்குகள் இப்படி நடப்பது கஷ்டமாருக்கு மேடம் என்றேன். அதன்பின் நன்றி கூறி கூண்டில் இருந்து இறங்கினேன்.

உதவி ஆணையரிடம் புகார் நேரா ஆவடி காவல் உதவி ஆணையர் அலுவலகம் சென்றேன்.ராஜா ராபர்ட் சார் இருந்தார்.

ரொம்ப பிஸியா இருந்தார். மீட்டிங் மீட்டிங் என உயர்மட்ட அளவில் அவருக்கு கூட்டம் இருந்தது. எல்லாம் முடித்து இன் னொரு கூட்டத்திற்கும் அவர் போக வேண்டும். உணவு எடுத்து கொண்டாரா என்று கூட தெரியல. அவ்வளவு நெருக்கடியிலும் எனக்கு ஒரு 15நிமிடம் ஆவது ஒதுக்கி இருப்பார். என் புகாரை கேட்டுக்கொண்டார். ஏன் சார் இத்தனை வாய்தா? ஏன் சார் எனக்கு சம்மன் கொடுக்கல? ஏன் சார் அந்த பெண் காவலர் இவ்வளவு கொடுமையாக என்னிடம் நடந்து கொண்டார்? சாட்சிக்கு வந்திருக்கும் அரசு மருத்துவரை அவர் நடத்திய விதம் தவறு, அவங்க ஆய்வாளரை அவர் பேசிய விதமும் தவறு, இதெல்லாம் விடுங்க.

இந்த வழக்கு நீடித் ததற்கு இவரும் காரணம், ஏன் சார் இப்படி நடந் தது என்றேன். அவசியம் நடவடிக்கை எடுக்கு றேன் டாக்டர் நான் என்றார், அவரிடம் அழைத்து பேசுறேன் என்றார். பேசுவார் என நம்புகிறேன்.

அந்த காவலர் மீது நடவடிக்கை வேண் டாம். ஆனால் அவர் இந்த தவறை இன்னொரு முறை செய்யக் கூடாது. சம்மன் உடனே வழங்க வேண்டும். மருத்துவர்களால் ஒரு தாமதம் ஆனது இந்த வழக்கில் என எந்த வழக்கும் இருக்கக் கூடாது என்பதை மீண்டும் ஆய்வாளர் அவர்களிடம் சொல்லி அங்கிருந்து கிளம்பி னேன்.சார் எனக்காக நேரம் ஒதுக்கி பொறு மையா என் புகாரை கேட்டார்.

மகிழ்ச்சி. #எங்கோ ஒரு வன்புணர்வு ஏற்படும் போது உச்சு கொட்டிட்டு கடந்து போவது சமூகப்பணி ஆகாது.

நாம் ஒரு வன்புணர்வு வழக்கை கையில் எடுக்கும் போது உரிய சிகிச்சையும் (பாதிக்கப் பட்டவருக்கு), உரிய தண்டனையும் (குற்றவா ளிக்கு) வாங்கிக் கொடுப்பதே சமூகப்பணி. இதை காலம் கடந்தும் செய்யக் கூடாது. காலம் கடந்து கொடுக்கும் நீதியும் அநீதியே.