தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!

7 Apr 2026, 5:42 pm
அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!
<p><strong>அவிநாசியின் அரசியல் முகத்தை மாற்றும் மருத்துவர் கோகிலா மணி!</strong></p> <p>தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் &nbsp;பறக்க தொடங்கியுள்ள நிலையில், மேற்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான அவிநாசி (தனி), இந்த முறை மாநிலத்தின் கவனத்தை ஈர்க்கும் விஐபி தொகுதியாக மாறியுள்ளது. ஒருபுறம் அதிகார பலம் கொண்ட ஒன்றிய இணை அமைச்சர், மறு புறம் எளிய பின்னணியில் இருந்து வந்த 26 &nbsp;வயது இளம் மருத்துவர் என இத்தொகுதி அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கிறது. எளிய பின்னணி; அசாத்திய துணிச்சல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அவிநாசியில் ஒரு புதிய அரசியலை புகுத்தியுள்ளது. 26 வயதே ஆன மருத்துவர் கோகிலா மணி இங்கு வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழி லாளியின் மகளான இவர், முன்னாள் முதல்வர் கலைஞரின் 3 சதவீத உள் இடஒதுக்கீடு எனும் சமூகநீதிப் பலனால் அரசு மருத்துவக் கல் லூரியில் பயின்று மருத்துவரானவர். கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் மருத்துவ மனையிலும், 2025 முதல் அவிநாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணியாற் றிய கோகிலா மணி, கொரோனா காலத்திலும் அதற்கு பின்னரும் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். ஒரு அதிகாரப்பூர்வ வேட்பாளராக மட்டுமன்றி, தொகுதி மக்க ளின் குறைகளை அறிந்த ஒரு &rsquo;ஊர்ப் பெண் ணாக&rsquo; அவர் வாக்கு சேகரிக்கும் இடமெல் லாம் மக்கள் தரும் வரவேற்பு, இத்தொகுதி யில் மாற்றத்திற்கான அறிகுறியாகத் தெரி கிறது. எல்.முருகனின் அதிகார ஆசையா? தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் &nbsp;பாஜகவின் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் இங்கு களம் காண்கி றார். ஒரு தேசிய அளவிலான &nbsp;அமைச்சராக இருந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற &nbsp;அவரது ஆசை ஏன் என்கிற கேள் வியை அவிநாசி மக்கள் முன்வைக்கின்றனர். பணமதிப்பிழப்பு மற் றும் ஜிஎஸ்டி (GST) &nbsp;காரணமாக அவிநாசி யின் முதுகெலும்பாக விளங்கும் பனியன் நிறுவனங்கள் மற்றும் விசைத்தறி தொழில் கடும் வீழ்ச்சியை சந் தித்துள்ளன. நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத் தவோ, விசைத்தறித் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங் களை கொண்டு வரவோ எல். முருகன் எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்கிற கோபம் தொழிலா ளர்களிடையே கொதித்துக் கொண்டி ருக்கிறது. எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது, அலகுமலை தீண் டாமை வேலி விவகாரத்தில் இவர் எடுத்த நிலைப்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின் அதி ருப்தியை பெற்றுள்ளது. முன்பே செய்தி ருக்கலாமே? கடந்த மூன்று ஆண்டுகளாக அவிநாசியில் போட்டியிடப் போவதாகக் கூறி வந்த அமைச்சர், ஒரு ஒன்றிய அமைச்சராக இருந்தபோது அவிநாசியின் அடிப்படைத் தேவைகளுக்கோ அல்லது இப்பகுதி விவசாயி களுக்கோ செய்த நன்மைகள் என்ன? என்ற கேள்விக்கு மக்களிடம் &rsquo;பூஜ்ஜியம்&rsquo; என்கிற பதிலே மிஞ்சுகிறது. அதிமுக கோட்டையில் ஏற்பட்ட விரிசல் அவிநாசி தொகுதி நீண்டகாலமாக அதிமுக கோட்டையாகவே இருந்து வந்தது. முன்னாள் சபாநாயகர் தனபால் இங்கிருந்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். ஆனால், அவர் மீதான மக்களின் குற்றச் சாட்டுகள் மிகக் கடுமையானவை. வீட்டும னைப் பட்டாக்கள், குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட அவர் கண்டு கொள்ளவில்லை. தற்போது இத்தொகுதி பாஜ கவுக்கு ஒதுக்கப்பட்டதும், தனபாலின் ஆதர வாளர்கள் மட்டுமல்லாமல் அதிமுகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், தன பாலின் மகன் &rsquo;தமிழக வெற்றிக் கழகம்&rsquo; சார் பில் வேட்பாளராக (ராசிபுரம்) களம் இறங்கி யிருப்பது, அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து எல்.முருகனின் தோல்வியை உறுதி செய் துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ள டக்கிய அவிநாசி தொகுதியில் 372 வாக்குச்சாவ டிகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள தொழிலா ளர் வர்க்கம் இம்முறை ஒரு புதிய மாற்றத்தை &nbsp;விரும்புகிறது. பெரிய பதவி, பண பலம், தில்லி &nbsp;தொடர்பு&rdquo; என பிரச்சாரம் செய்யும் எல். முரு கனை விட, &rdquo;நம்ம வீட்டுப் பிள்ளை, மக்கள் மருத்துவர், சமூகநீதியின் சாட்சி&rdquo; என வலம் வரும் கோகிலா மணி அவிநாசியின் அரசியல் &nbsp;கணக்குகளை மாற்றியமைப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவு, வெறும் &nbsp;வெற்றி தோல்வி மட்டுமல்ல; அது அதிகாரப் பகட்டுக்கும் - எளிய மக்கள் சேவைக்கும் &nbsp;இடையிலான தீர்ப்பாக இருக்கும் என்பதே &nbsp;பேசுபொருளாக உள்ளது. -கவி</p> <p>&nbsp;திமுக சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணிக்கு எதிராக, அதே பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். இது இத்துப்போன பழைய பாணி என்றாலும், எல்.முருகனின் இந்த டெக்னிக் அவிநாசி தொகுதி அரசியல் நோக்கர்கள் சிரிப்பாய் சிரித்து வருகின்றனர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரமும் (Affidavit), கோகிலா மணி என்ற பெயரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் பிரமாணப் பத்திரமும் ஒரே நோட்டரி வழக்கறிஞரால் (A.R. ரங்கசாமி) சான்றொப்பம் செய்யப்பட்டுள்ளது. இது தற்செயலானது என்று சொல்ல முடியாத அளவிற்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, ஒரு இளம் பெண்ணின் வளர்ச்சியை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், &rsquo;பெயர் குழப்பத்தை&rsquo; ஏற்படுத்தி வாக்குகளை பிரிக்க முயல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அதே பெயரை கொண்ட ஒரு பெண்ணை, அவிநாசி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு எதிராக நிறுத்தியிருப்பது, பாஜகவின் திட்டமிட்ட &rsquo;சதி&rsquo; வேலையாகவே பார்க்கப்படுகிறது. அரசு எந்திரத்தையும், தனக்குச் சாதகமான வழக்கறிஞர்களையும் பயன்படுத்தி, தேர்தலை திசைதிருப்பும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஒன்றிய அமைச்சர் என்கிற பெரிய பதவியில் இருப்பவர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இது போன்ற குறுக்குவழி அரசியலில் ஈடுபடுவது அவர் மீதான நற்பெயரை மேலும் சீர்குலைத்துள்ளது. அதிகார பலமும், அரசியல் தந்திரங்களும் ஒரு இளம் மருத்துவப் பெண்ணின் மக்கள் செல்வாக்கை என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.