முந்தய பக்கம்

பெண்களுக்குத் தனிக் கனவுகளா?

28 Mar 2026, 4:13 pm
பெண்களுக்குத் தனிக் கனவுகளா?
<p><strong>பெண்களுக்குத் தனிக் கனவுகளா?</strong></p> <p>ஆம் என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. ஆண் களின் கனவுகள் பிற ஆண்களு டனான விரோதம், போட்டி என்று பெரும்பாலும் இருக்கிறது. பெண்களோ இருபாலர் நல்லுறவு சார்ந்ததாக இருக்கிறது. சமூகத்தில் தங்கள் நிலையை வைத்து, எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பெண்களின் மனவோட்டம்தான் கனவுகளாக வெளிப்படுகிறது. மானிக் லார்ட்டி-லுசியர் நடத்திய ஆய்வு, வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் முன்னேற்றம் பற்றியும், வேலைக்குச் செல்லாத பெண்கள் குடும்பத்தைப் பற்றியும் அதிகம் கனவு காண்கிறார்கள் என்று சொல்கிறது. கனவுகளுக்கு அடுத்து என்ன என்பதிலும் பெண்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். &ldquo;மெடா அனலிசிஸ்&rdquo; என்ற சொல்லக்கூடிய முறையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், 24 விழுக்காடு பெண்கள் தாங்கள் கண்ட கனவை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றும், ஆண்களில் 14 விழுக்காட்டினர்தான் அதை நினைவில் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்திருக்கிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram