முந்தய பக்கம்

பொறுப்பை மறக்காதே!

9 May 2026, 2:24 pm
பொறுப்பை மறக்காதே!
<p><strong>பொறுப்பை மறக்காதே!</strong></p><p>உண்மை உரைத்திடத் தயங்காதே! உதவார் நடிப்பில் மயங்காதே! புண்ணில் அம்பைப் பாய்ச்சாதே! பொறுப்பை மறந்து திரியாதே! மூடக் கருத்தை ஏற்காதே! முடியா தென்றே தோற்காதே! கேடுகள் விளைக்க எண்ணாதே! கீழோர் தொடர்பை நாடாதே! வீணே துயரால் வெம்பாதே! வீணர் சொற்களை நம்பாதே! தூணே என்பார்! மறுநொடியே துரும்பாய் எண்ணி இகழ்வாரே! எல்லாருக்கும் எல்லாமும் என்றும் கிடைத்திட உழைப்பாயே! பொல்லார் செயல்கள் எந்நாளும் புலம்பிடச் செய்யும் உணர்வாயே! சிந்தனை மலடாய் இருக்காதே! சீர்மை அறத்தை வெறுக்காதே! முந்தையர் மாண்பை மறக்காதே முகவரி இழந்து தவிக்காதே! உறுபழி சுமக்க விரும்பாதே! ஒப்பனை வாழ்க்கை உதவாதே! அறிவை அடகும் வைக்காதே! ஆன்றோர் சொற்களை ஒதுக்காதே!</p>
Share
FacebookXWhatsAppTelegram