முந்தய பக்கம்

தமுஎகச பெரம்பலூர் மாவட்ட மாநாடு

1 Dec 2025, 5:20 pm
தமுஎகச பெரம்பலூர் மாவட்ட மாநாடு
<p><strong>தமுஎகச பெரம்பலூர் மாவட்ட மாநாடு</strong></p> <p>பெரம்பலூர், டிச.1- &nbsp;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்-சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு, கவிஞர் நந்தலாலா அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. &nbsp;மாநாட்டில் தமிழ்மாறன், காப்பியன், நடராசன், தாகிர் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராஜசேகர், கவிஞர் அகவி, கவிஞர் செந்தில்குமரன் ஆகியோர் பாடல் மற்றும் கவிதையை வாசித்தனர். தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா &ldquo;வெறுப்பின் கொற்றம் வீழ்க; அன்பே அறமென எழுக&rsquo;&rsquo; என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, மருத்துவர் கருணாகரன் வரவேற்புரை ஆற்றினார். இரா.எட்வின் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமுஎகச நிர்வாகிகள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் மாவட்டத் தலைவராக மருத்துவர் கருணாகரன், செயலாளராக இரா.எட்வின், பொருளாளராக போஸ்கோ, துணைத் தலைவர்களாக அகவி மற்றும் பிரியா, துணைச் செயலாளர்களாக மருத்துவர் விஜய் ஆனந்த் மற்றும் பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram