முந்தய பக்கம்

திருத்தணியில் கலையரங்கம் அமைக்க வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்

23 Dec 2025, 4:05 pm
திருத்தணியில் கலையரங்கம் அமைக்க வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்
<p><strong>திருத்தணியில் கலையரங்கம் அமைக்க வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், டிச.23- இந்து சமய அறநிலை யத்துறை யின் கீழ் இயங்கும் அனைத்து கோயில் திருவிழா காலங்களில் அந்தந்த பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டார அளவில் உள்ள, அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சந்திப்பு மாநாடு &nbsp;திருத்தணியில் செவ்வாயன்று (டிச.23), கிளை தலைவர் சின்ன பையன் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி &nbsp;செயலாளர் &nbsp;குமார் &nbsp;வரவேற்றார். மாவட்ட தலைவர் &nbsp;தேசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணை செய லாளர் வி.அந்தோணி நிறைவுரையாற்றினார். முன்னதாக திருத்தணி கிளை பொருளாளர் &nbsp;இனியவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இறுதி யாக ராமராஜன் நன்றி கூறினார். தீர்மானங்கள் நாட்டுப்புற கலைஞர்கள் நலன் கருதி திருத்தணியில் கலையரங்கம் அமைக்க வேண்டும், அனைத்து கலை ஞர்களுக்கும் கலை உப கரணங்களை இலவசமாக வழங்க வேண்டும், &nbsp;வட்டார அளவில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்க ளுக்கும் பயிற்சி பட்டரை நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram