கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
21 Feb 2026, 4:39 pm

திமுக இளைஞரணி சந்திப்புக்கூட்டம்

கோவை, பிப்.21- கோவையில் ஞாயிறன்று (இன்று) நடைபெறும் திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத் திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின் றன. இந்நிலையில் திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர் வாகிகள் சந்திப்புக் கூட்டம், கோவை கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே ஞாயிறன்று (இன்று) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக இளைஞரணி செய லாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றுகிறார். இக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை, எல்.இ.டி திரை, பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.

வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற லாரியில் தீ

நாமக்கல், பிப்.21- மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசி, ஈச்சர் லாரி மற் றும் 84 வைக்கோல் கட்டுகள் முழுமையாக தீக்கிரையா னது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள இறை யமங்கலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜெகன்குமார், வெள்ளியன்று மோளகவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்து, அங்குள்ள விவசாயிடம் 84 கட்டு வைக்கோல் வாங்கி, அதை தனது ஈச்சர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். மோளகவுண்டம்பாளையம் மயானம் அருகே சென்றபோது, மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றியது. காய்ந்த வைக்கோலில் விழுந்த தீப்பொறியால் லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதையறிந்த ஜெகன்குமார், குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் இருந்து வெளியேறும் வகையில், விவசாய நிலத்தில் வாகனத்தை செலுத்தினார். அதற்குள் ளாகவே மெல்ல மெல்ல வைக்கோல் கட்டுகளில் தீ மேலும் அதிகரித்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஈச்சர் லாரியை திறந்தவெளியில் நிறுத்தி விட்டு இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ மள மளவென லாரி முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவ லறிந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான வீரர்கள், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த விபத் தில் வைக்கோல் உருளைகளுடன் சேர்த்து, டீச்சர் லாரி முழுவதும் தீக்கிரையானது. இவ்விபத்து குறித்து பள்ளி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

குண்டர் சட்டத்தில் அடைப்பு

உதகை, பிப்.21- ரேசன் அரிசி கடத்திச் சென்றதாக நீலகிரி, சேரம் பாடியை சேர்ந்த முகமது (33) என்பவரை காவல் துறையி னர் கடந்த ஜன.24 ஆம் தேதியன்று கைது செய்த னர். இவர் மீது இதே குற்றத் துக்காக 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இதைய டுத்து இவரை குண்டர் சட்டத் தில் கைது செய்ய பரிந் துரைக்கப்பட்டது. அதனை யேற்று, முகமதுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சி யர் உத்தரவிட்டார்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை ஆயுதப்படை அதிகாரி பணியிடை நீக்கம்

கோவை, பிப்.21- பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில், கோவைபுதூரி லுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4 ஆவது அணியின் கமாண்டண்டாக பணியாற்றி வந்த வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பயிற்சிக்கு சேர்ந்த பெண் காவ லர் ஒருவரிடம், கமாண்டண்ட் செந்தில்குமார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கள் எழுந்தன. இதுதொடர்பாக பாதிக்கப் பட்டவர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகார், உடனடியாக உள் புகார் குழுவின் (Internal Complaints Committee - ICC) விசார ணைக்கு அனுப்பப்பட்டது. புகாரின் தீவி ரத்தன்மை மற்றும் வழக்கின் சூழலை கருத் தில் கொண்டு, செந்தில்குமாரை உடனடியாக பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி கள், 1955 – விதி 17 (e)-ன் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், அரசின் முறையான அனுமதி இன்றி அவர் தலைமையகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள் ளது. தற்போது இப்புகார் குறித்து உள் புகார் குழு (ICC) விரிவான விசாரணையை மேற் கொண்டு வருகிறது. இந்த விசாரணை அறிக் கையின் அடிப்படையில், அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் துறை ரீதி யான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் கொலை: வாலிபர் கைது

கோவை, பிப்.21- துடியலூர் அருகே இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்து, உடலை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்திலுள்ள தனியார் கல் லூரி பின்புறம் உள்ள புதரில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலு வலர் பாண்டி அளித்த தகவலின் பேரில், துடியலூர் காவல் ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சடலத்தை மீட்டு தீவிர விசா ரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த வர் செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த அனிதா (25) என்பதும், அவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. திருமணமான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான தமிழ்செல் வன் (30) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனியாக பேச வேண்டும் எனக்கூறி, அனிதாவை தனது இரு சக்கர வாகனத்தில் தமிழ்செல்வன் அழைத் துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திர மடைந்த தமிழ்செல்வன், அங்கிருந்த கட்டை யால் அனிதாவின் தலையில் பலமாக தாக்கி யுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை சிதைக்கவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட் ரோலை ஊற்றி சடலத்திற்கு தீ வைத்து விட்டு தமிழ்செல்வன் தப்பியோடியுள்ளார். அனிதாவின் செல்போன் எண்ணை வைத்துத் துப்பு துலக்கிய போலீசார், தனியார் பள்ளி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் தமிழ்செல் வனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

கௌசிகா நதி தூர்வாரும் பணி துவக்கம்

கோவை, பிப்.21- பல்வேறு அமைப்புகள் இணைந்து, கௌசிகா நதி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி சனியன்று துவங்கியது. கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதார மான கௌசிகா நதியின் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணிகள் சனியன்று துவங்கி யது. கணுவாய் முதல் சின்னவேடம்பட்டி ஏரி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வாய்க்காலை, ‘கௌசிகா நீர்க்கரங் கள்’ மற்றும் ‘சின்னவேடம்பட்டி ஏரி பாது காப்பு அமைப்பு’ ஆகியவற்றுடன் ‘அபெக் சான்’ தனியார் நிறுவனம் இணைந்து சீரமைக் கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தன்னார்வ லர்களின் விடாமுயற்சியால் இந்த நதி மீட்டெ டுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பருவமழை யின் போது இந்த வாய்க்காலில் நீர் வடிந் தது குறிப்பிடத்தக்கது. நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கௌசிகா நீர்க்கரங்கள் நிறுவனர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவுப் பதிவு: வங்கதேசத்தினர் 6 பேர் திருப்பூரில் கைது

திருப்பூர், பிப்.21- பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வளைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வந்த வங்கதேசத்தை சேர்ந்த 6 பேரை டெல்லி போலீசார் சனியன்று திருப்பூரில் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் தங்கிருந்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்த ஆறு நபர்களை டெல்லி போலீசார் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி போலீசார் திருப்பூர் வந் துள்ளனர். இந்நிலையில் சனியன்று திருமுருகன்பூண்டியில் வைத்து ஒரு நபரையும், பல்லடம் பகுதியில் மூன்று நபர்க ளையும் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் இரண்டு பேர் என ஆறு நபர்களை கைது செய்துள்ளனர்.மேலும், அவர்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த மிஜானுர் ரகுமான் (33), முகம்மது சபாத் (34), உமர் (29), முகம்மது லிடான் (30), முகம்மது ஜாகித் (28), முகம்மது உஜ்ஜால் (29) என்பது தெரிய வந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவ லைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தது தெரியவந் துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன் கள் மற்றும் 16 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து, திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லிக்கு அழைத்து சென்ற னர்.

தமிழ் மொழியாக்கமும் தஞ்சை சோழர்களும் உரைவீச்சு

திருப்பூர், பிப். 21 – திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மொழியாக்கமும், தஞ்சை சோழர்களும் எனும் தலைப்பில் உரைவீச்சு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி தொல்லியல் மரபு மன்றம், தமிழ்த் துறையும் இணைந்து சனியன்று கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் தமிழ் மொழியாக்கமும், தஞ்சை சோழர்களும் என்ற தலைப்பில் உரை வீச்சு நடைபெற் றது. இதில் தொல்லியல் மரபு மன்றத் துணைத்தலைவர் பேரா சிரியர் சங்கமேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் செங்கமுத்து முன்னிலையில், கல்வெட்டு அறிஞர், தொல்லியல் ஆய்வா ளர்கள், அனைத்துலக கட்டிடக்கலை பாதுகாப்பியல் வல்லு நர் பேராசிரியர் தெய்வநாயகம் சிறப்புரை ஆற்றினார். மேலும் உலகத்திலேயே மிக நீண்ட கல்வெட்டு தமிழில்தான் உள்ளது என்று அவர் கூறினார். இறுதியாக பேராசிரியர் பாலசுப்பிரம ணியம் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம்

திருப்பூர், பிப்.21 - திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் மாதாந்திரப் பராம ரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் குடிநீர் வழங்கும் அளவு குறையும். எனவே வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.24) அன்று ஒரு நாள் மட்டும் மாநகரில் குடிநீர் விநியோகம் இருக் காது என்று மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் தெரிவித் துள்ளார்.

கீரிப்பிள்ளை வளர்த்தவர் கைது

திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாவட்டம் கருவலூர் பகுதியில் பாதுகாக்கப் பட்ட உயிரினங்கள் பட்டியலில் உள்ள கீரிப்பிள்ளைகளை வளர்த்து வந்தவர் சனியன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவிநாசி தாலுகா கருவலூர் பகுதியில் கீரிப்பிள்ளைகள் வளர்க்கப்படுவது பற்றி திருப்பூர் வனச்சரக குழுவினருக்கு தகவல் கிடைதுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்று வனத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், கரு வலூர் மேற்கு ரத வீதியைச் சேர்ந்த கருப்புசாமி (37) என்பவர் வீட்டில் 2 சாம்பல் நிற கீரிப்பிள்ளைகளை சட்டவிரோதமாகப் பிடித்து வைத்து வளர்த்து வந்ததை உறுதிப்படுத்தினர். இதை தொடர்ந்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கருப்புசாமி கைது செய்யப்பட்டார். பின் னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் சாம்பல் நிற கீரிப்பிள்ளைகள் அட்டவணை 1 இல் வகைப்படுத்தப் பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். இவற்றை உரிய அனுமதியின்றி வளர்ப்பது மற்றும் உடைமை வைத்தி ருப்பது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. வன உயிரினங் களைப் பிடிப்பது வீட்டில் வளர்ப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் கடும் சிறை தண் டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலமில்லாத குடும்பங்களுக்கு வழங்கிய நிலம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

திருப்பூர், பிப்.21 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங் கயம் பகுதிகளில் நிலம் இல்லாத 5 ஆயி ரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட் டுள்ள நில உச்சவரம்பு நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தலித் விடுதலை இயக் கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப் பையா, திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது. தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு, தமிழக அரசின் நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில், சுமார் 25 நபர்களுக்கு 100 ஏக்கர் நிலம் அரசால் கையகப்ப டுத்தப்பட்டு, அப்போதைய ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரால் விவ சாயம் செய்வதற்காக வழங்கப்பட்டது. ஆனால், மேற்கண்ட நிலங்கள் இன்று வரை 25 ஆண்டுகளாக நிலம் வழங் கப்பட்ட பயனாளிகளுக்கு நிலம் ஒப் படை செய்யப்படவில்லை. இது குறித்த பயனாளியின் புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்ட பின்னரும், சீராய்வு மனு குறித்து எவ் வித முடிவையும் தெரிவிக்காமல், மீண்டும் தாராபுரம் வருவாய் கோட்டாட் சியரிடம் விசாரணை மேற்கொண்டு விரி வான உத்தரவு பிறப்பிக்க கடந்த வருடம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தாராபுரம் வருவாய் கோட் டாட்சியர் மேற்கண்ட நில உச்சவரம்பு பயனாளியின் வாரிசுதாரர்களையும், ஆக்கிரமிப்பாளரையும் அழைத்து விசா ரணை மேற்கொண்டார். இந்த விசா ரணை நடத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்த பின்னரும், இன்று வரை எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், கொழுமங்குளி கிராமத்தில் மற்ற பயனாளிகளுக்கும் வழங்கப்பட்ட நில உச்சவரம்பு நிலம் மீதான தனிநபர் ஆக் கிரமிப்பு குறித்தும் எவ்வித நடவடிக்கை யும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச் சனையில் நேரடியாக தலையிட்டு, காங்கயம் மற்றும் தாராபுரம் தாலுகா பகுதிகளில் சுமார் 5,000 ஏழை, எளிய நிலம் இல்லாத குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நில உச்சவரம்பு நிலங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவதோடு, கொழு மங்குளி கிராமத்தில் ஈரோடு நில சீர்தி ருத்த உதவி ஆணையாளர் அலுவல கம், மூலமாக கடந்த 2002ஆம் ஆண்டு நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள நில உச்சவரம்பு நிலங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பு குறித்து முறை யாக நடவடிக்கை எடுத்து, பயனாளி களிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப் பிரச்சனையில் பயனா ளிகளுக்கு உரிய தீர்வு வழங்காமல் காலம் கடத்தி வரும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் மோசடி: ஆட்சியரிடம் புகார்

உதகை, பிப்.21- உதகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த லோகநாயகி உட் பட 10 பேர், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: நாங்கள் அனைவரும் உதகையில் வசித்து வருகிறோம். சாலினி, அருண், திலக் மற்றும் மகாலட்சுமி ஆகிய நான்கு பேர் எங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். மேலும், தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாகக்கூறி எங் களிடமிருந்து தலா ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் வரை பெற்றுக் கொண்டனர். ஆனால், எங்க ளுக்கு எவ்வித தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தி தர வில்லை. எங்கள் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்ட னர். அவர்கள் தொடர்பு கொண்டு பணம் கேட்டால், எங்களை தகாத வார்த்தைகள் கூறி கொலை செய்துவிடுவதாக மிரட்டு கின்றனர். மேலும், காவல் நிலையங்களில் அவர்கள் மீது புகார ளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு

நாமக்கல், பிப்.21- பகல் நேர வெயிலின் தாக்கம் அதிகரிக் கும் என்பதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்து வக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில். கடந்த வாரத்தில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 69.8 டிகிரியாக நிலவி யது. அடுத்த ஐந்து நாட்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளி வாகக் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப் பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசும். தற்போது நிலவி வரும் குறைந்த இரவு வெப்பமும், அதி கரித்து வரும் பகல் வெப்பமும் கோழிக ளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தக்கூ டும். குறைந்த வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம் இதற்கு நேர்மாறாக அயற்சியை ஏற்படுத்தி எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை தூண்டிவிடக்கூடும். இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிர்கொள்ளும் வகையில், தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை (குறிப் பாக வைட்டமின் சி மற்றும் கோலின் குளோரைடு) சேர்த்து வர வேண்டும். கோடைக்காலம் நெருங்குவதால் கோழிப் பண்ணைகளின் நீர் ஆதாரங்கள், நீர் குழாய்கள், நீர் தெளிப்பான்கள் மற்றும் நிப் பிள்களில் அடைப்பை நீக்கி தயாராக வைத்தி ருக்க வேண்டும். கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரி சோதனை செய்ததில் பெரும்பாலானவை வெள்ளைக்கழிச்சல், ஈக்கோலை மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந் துள்ளது. எனவே, கோழிப்பண்ணையாளர் கள் தகுந்த உயிர் எதிர் மருந்துகளை அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால் நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இனிவரும் நாள்களில் பகல் நேர வெப்பநிலை அதிக ரிக்கும்பட்சத்தில், கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பண் ணையாளர்கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நீர் குழாய்களை தயாராக வைத்தி ருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்

தருமபுரி, பிப்.21- சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட தொழிலாளியின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்ட ணத்தை அடுத்த ஜகதாப், ராசிக்குட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (26). பெயிண்ட் அடிக் கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த பிப்.16 ஆம் தேதி காவேரிப்பட்டணம் - பாலக்கோடு கூட்டுச்சாலை அருகே இருசக்கர வாகனத் தில் சென்றபோது, நிகழ்ந்த விபத்தில் படுகா யமடைந்தார். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிப்.18 ஆம் தேதியன்று மூளைச் சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உட லுறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சிறுநீரகங்கள் கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும், இத யம், நுரையீரல் சென்னை அரசு மருத்துவ மனைக்கும், இரு கண்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட் டன. தொடர்ந்து, உடலுறுப்புகள் தானம் அளித்த சக்திவேல் உடலுக்கு தருமபுரி மருத் துவக்கல்லூரி முதல்வர் மனோகரன் மற் றும் மருத்துவர்கள், செவிலிலர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தி னர்.

அதிக கட்டணம் - ஆட்டோக்கள் பறிமுதல்

தருமபுரி, பிப்.21- பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்ததாக 13 ஆட்டோக் களை தருமபுரி வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் புதிதாக பேருந்து நிலையம் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இத னால், பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலைய வழித்தடத்தில் பொதுமக்கள் செல்ல ஆட்டோக்களை பயன் படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தி சில ஆட்டோ ஓட்டு நர்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்வதாக ஆட்சியர் சதீஷிடம் புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவ லர் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய் வாளர் தரணிதர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது கண்டறியப்பட்டது. அதிக கட்டணம் வசூ லித்தது மற்றும் இதர குற்றங்களுக்காக 12 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில் இதே போல் அதிக கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும். தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிக கட்டணங்கள் வசூலிப்பது தகுதிச் சான்று இல்லாமல் இயக்குவது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதி முறை மீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங் கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.