திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்கும் இளைஞரணி - வழக்கறிஞரணி
12 Apr 2026, 5:30 am

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்கும் இளைஞரணி - வழக்கறிஞரணி

தேனி, ஏப்.11- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் பெ.சக்திவேல் ஆகியோரை ஆதரித்து திமுக இளைஞரணி மற்றும் வழக்கறிஞரணி களம் இறங்குகிறது.

திமுக தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் இளைஞரணி செயலாளர் அ.ஆதித்யன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் வேட்பாளர் பெ.சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர்.

தேனி முன்னாள் எம்பிக்கள் எஸ்.பி.எம்.சையது கான், ரவீந்திரநாத், பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார், போடி நாயக்கனூர் தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேல், பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போல திமுக வழக்கறிஞர் அணியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.