தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் இருந்து யார் வந்தாலும், கோவையில் திமுகவே வெல்லும்: செந்தில் பாலாஜி உறுதி

11 Apr 2026, 5:30 am
தில்லியில் இருந்து யார் வந்தாலும், கோவையில் திமுகவே வெல்லும்: செந்தில் பாலாஜி உறுதி

தில்லியில் இருந்து யார் வந்தாலும், கோவையில் திமுகவே வெல்லும்: செந்தில் பாலாஜி உறுதி

கோவை, ஏப். 10- தில்லி அல்லது குஜராத்தில் இருந்து யார் வந்தாலும் சரி, கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என திமுக மேலிட மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவிதா கண்ணையனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தொண்டர்கள் அயராது பணியாற்ற வேண்டும். சேலத்தில் இருந்து வந்தாலும், தில்லியில் இருந்து வந்தாலும் இங்கு குதிப்பவன் சின்னமே வெல்லும், என்றார்.

இதைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து துடியலூரில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்நிகழ்வில், திமுக மாவட்டச் செயலாளர் ப.மு.முபாரக், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். காந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் வி.எம்.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவசாமி, சிபிஎம் மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.