திமுக மீண்டும் ஆட்சி அமைவது உறுதி
10 Apr 2026, 5:30 am

திமுக மீண்டும் ஆட்சி அமைவது உறுதி

செட்டியப்பட்டி பிரச்சாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சின்னாளப்பட்டி, ஏப்.9- தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி என்று திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி, ஆத்தூர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.

செட்டியப்பட்டியில் உரையாற்றிய அவர், திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பேசினார். இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.