எந்த சூழலிலும் பாஜகவுடன், திமுக கூட்டணி சேராது! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி
7 Jun 2026, 9:02 pm

எந்த சூழலிலும் பாஜகவுடன், திமுக கூட்டணி சேராது! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி

புதுக்கோட்டை, ஜூன் 7 - எந்தச் சூழலிலும் பாஜக வுடன், திமுக கூட்டணி சேராது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவில் இருந்து பதவிக்காக சிலர், தவெகவுக்குச் செல்கிறா ர்கள்.

6 மாதங்கள் கழித்து பதவி கிடைக்காவிட்டால் மீண்டும் திரும்பி விடுவார் கள். ஹரியானாவில் இது போல் தான் நடந்தது. தமிழ கத்தில் இதுவரை இல்லை. இப்போது நடக்கிறது. அண்ணாமலை யாருடைய டீம் என இதுவரை தெரிய வில்லை, போகப் போகத் தெரிந்துவிடும். காங்கிரஸை மீண்டும் இணைத்துக் கொள்ள முடி யாது.

காங்கிரஸ் இடம் பெறும் இந்தியா கூட்டணி யிலும் நாங்கள் இடம்பெற முடியாது. அடிமட்டத்தி லுள்ள கட்சித் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் அவ காசம் இருக்கிறது. எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட் டணி சேர மாட்டோம்” என்றார்.