முந்தய பக்கம்

முதலமைச்சர் குறித்து அவதூறு: திமுக ஆதரவாளர் கைது

25 May 2026, 9:38 pm
முதலமைச்சர் குறித்து அவதூறு: திமுக ஆதரவாளர் கைது
<p><strong>முதலமைச்சர் குறித்து அவதூறு: திமுக ஆதரவாளர் கைது</strong></p><p>சென்னை, மே 25- தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பியதாக திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் ராஜா என்பவர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவமதிப்பை ஏற்படுத்தியது, பொய்யான தகவல் பரப்புதல், குற்றவியல் மிரட்டல், மதம், இனம், மொழி அடிப்படையில் வெறுப்பை தூண்டும் வகையில் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கோவை விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை இலக்கு வைத்து மதம், மொழி, இனம் சார்ந்த அவதூறான பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. திமுக ஆதரவாளராக இருந்த இவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram