தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்ச் 8 திருச்சியில் திமுக மாநில மாநாடு பந்தல் கால் நடும் விழா-அமைச்சர்கள் பங்கேற்பு

1 Feb 2026, 3:51 pm
மார்ச் 8 திருச்சியில் திமுக மாநில மாநாடு பந்தல் கால் நடும் விழா-அமைச்சர்கள் பங்கேற்பு
<p><strong>மார்ச் 8 திருச்சியில் திமுக மாநில மாநாடு பந்தல் கால் நடும் விழா-அமைச்சர்கள் பங்கேற்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.1 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் &ldquo;ஸ்டாலின் தொடரட்டும், தமிழ் நாடு வெல்லட்டும்&rdquo; என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8 &nbsp;ஆம் தேதி திருச்சியை அடுத்த சிறுகனூ ரில் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் &nbsp;10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். &nbsp;இந்நிலையில் மாநாட்டுப் பணி களை தொடங்கும் விதமாக திருச்சி - &nbsp;சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறு கனூரில் மாநாடு நடைபெறும் இடத் தில் ஞாயிறன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாநாட்டுப் &nbsp;பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலா ளர் மேயர் அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாக ராஜன், பழனியாண்டி, செளந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, &ldquo;மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் நடை பெற உள்ள திமுக மாநாடு இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை காட்டிலும் &nbsp;சிறப்பாக இருக்கும். 650 ஏக்கர் பரப்பள வில் அந்த மாநாடு நடைபெற உள்ளது. திருச்சியை இரண்டாவது தலை நகராக அறிவிக்க வேண்டும் என்பது &nbsp;எங்கள் விருப்பம்; இது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். &nbsp;ஒரு கட்சித் தலைவர் மற்றொரு கட்சி &nbsp;தலைவரை நேரில் சந்திப்பது இயல்பா னது. அதுபோல்தான் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அவர் &nbsp;எடப்பாடி பழனிச்சாமி போல் முகத்தை &nbsp;கைக்குட்டையால் மூடிக்கொண்டு யாரையும் சென்று சந்திக்கவில்லை; வெளிப்படையாக சென்றுதான் சந்தித்தார்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.