தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு வங்கியை உருவாக்குவதற்கான வாக்குறுதியை திமுக தர வேண்டும்! ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை

14 Feb 2026, 4:33 pm
தமிழ்நாடு வங்கியை உருவாக்குவதற்கான வாக்குறுதியை திமுக தர வேண்டும்! ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை
<p><strong>தமிழ்நாடு வங்கியை உருவாக்குவதற்கான வாக்குறுதியை திமுக தர வேண்டும்! ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை</strong></p> <p>சென்னை, பிப்.14- தமிழ்நாடு மாநில தலை மை கூட்டுறவு வங்கி மற்றும் &nbsp;24 மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உரு வாக்க வேண்டும், நகர கூட்டு றவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப் &nbsp;படுத்த வேண்டும் என வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (பிப்.14) சென்னையில் கருத் &nbsp;தரங்கம் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி ஊழியர் &nbsp;சம்மேளனம் சார்பில் நடை பெற்ற இந்த கருத்தரங்கில் பேசிய ஆர். சச்சிதானந்தம் எம்.பி., &ldquo;ஒன்றிய கூட்டுறவு &nbsp;அமைச்சகம் உருவாக்கப் பட்ட பிறகு கடந்த 5 ஆண்டு களில் 56 கூட்டுறவு வங்கி களை மூடியுள்ளனர். &lsquo;இரட்டை &nbsp;என்ஜின் ஆட்சி&rsquo; எனப்படும் &nbsp;பாஜக ஆளும் மாநிலங்க ளில்தான் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மூடப் பட்டுள்ளன. தொழில்களையும், வங்கிகளையும் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் தான் போராடுகின்றன. கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உரு வாக்கினால் 7 சதவிகித வட்டி யில் கொடுக்கப்படும் கடனை, 5.25 சதவிகித வட் &nbsp;டிக்குத் தர முடியும். தமிழ் நாடு பலவகைகளில் முன் மாதிரியாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வங்கி உருவாக்கப்படும் என்று வாக்குறுதியை திமுக தனது &nbsp;தேர்தல் அறிக்கை வாயி லாக வழங்க வேண்டும். &nbsp;அதற்கான முன்முயற்சி களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எடுக்கும்&rdquo; என்றார். அ.சவுந்தரராசன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய சிஐ டியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன், &nbsp;&ldquo;நிறுவனம் என்றாலே &lsquo;லாபம்&rsquo; தான் நோக்கமாக இருக்கி றது. ஆனால் கூட்டுறவு &nbsp;அமைப்பில், &lsquo;மக்களுக் காக&rsquo; என்ற இலக்கை முன் &nbsp;வைப்பது தான் ஜனநாய கம்&rdquo; என்றார். வி.கே. பிரசாத் கேரள வங்கி இயக்குநர் &nbsp;வி.கே. பிரசாத் பேசுகையில், &nbsp;&ldquo;13 மாவட்ட வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து 2019ஆம் ஆண்டு கேரள வங்கி உரு வாக்கப்பட்டது. அது 800-க்கும் மேற்பட்ட கிளை களோடு ஒரு லட்சத்து 25 &nbsp;ஆயிரம் கோடிக்கு வர்த்த கம் செய்துள்ளது. 50 ஆயி ரம் கோடி கடன் அளவு என்று &nbsp;பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த &nbsp;நிலையில் மிகப் பெரிய வர்த் &nbsp;தக அளவை கேரள வங்கி எட்டியுள்ளது&rdquo; என்றார். இந்நிகழ்வில் அகில &nbsp;இந்திய விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் தி. தமிழரசு, பொதுச் செய லாளர் இ. சர்வேசன், பெபி தலைவர்கள் ரவிக்குமார், சி.பி. கிருஷ்ணன், கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் ஏ. &nbsp;கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.