விசிகவுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை!
2 Mar 2026, 3:30 pm
<p><strong>விசிகவுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை!</strong></p>
<p>சென்னை, மார்ச் 2 - மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைக்கு அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழு தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி திங்கட்கிழமை ன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி யது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற இந்தப் பேச்சு வார்த்தையில், விசிக தலை வர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, து.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திருமாவள வன், “2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்ப தற்கான தேர்தல்” என்றும், “திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணியாக உள்ளது. எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் மோடியின் அரசியல் எடுபடாது” என்றும் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து, எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகம், சு.க. முருக வேல்ராஜன் தலைமையி லான மக்கள் விடுதலைக் கழகம், மூவேந்தர் முன் னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை யில் கலந்து கொண்டன.</p>
