திமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கீடு!
3 Mar 2026, 3:38 pm
<p><strong>திமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கீடு!</strong></p>
<p>சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு, ஒரு மாநிலங்களவை இடத்தை திமுக ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங் களுக்கு மார்ச் 16 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4 இடங்களில் திமுக சார்பிலும், 2 இடங்களில் அதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற் கான வாய்ப்பு உள்ளது. தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், செவ்வாயன்று இரவு சென்னை அண்ணா அறிவா லயம் வருகை தந்தார். அங்கு திமுக தலைவரும் முதல்வரு மான மு.க. ஸ்டாலின், இளைஞரணி தலைவரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோரைச் சந்தித்துப் பேசி னார். அப்போது, மாநிலங்களவை இடத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பில் போட்டியி டும் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் பொதுச்செய லாளர் பிரேமலதா அறிவிப்பார் என்று கூறியுள்ள எல்.கே. சுதீஷ், சட்டமன்றத் தொகுதிப் பங்கீடும் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p>
