திருவில்லிபுத்தூரில் திமுக பொதுக்கூட்டம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் திமுக பொதுக்கூட்டம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர் நகரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு ரத வீதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் அய்யாவு பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி சிறப்புரையாற்றினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், மாவட்ட நிர்வாகி ஆர்.வி.கே. துரை, நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
