கள்ளக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டம்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>கள்ளக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, பிப்.23- “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்தை வலியுறுத்தி திமுக சார்பில் கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம்கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பன், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையர சன், மாவட்ட துணை செயலாளர் புவனேஸ் வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நகர செயலாளர் சுப்ராயலு வர வேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசுகை யில், கள்ளக்குறிச்சியில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை வைக்கக்கூடாது என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். கள்ள க்குறிச்சி புறநகர் பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற த்திற்கு சென்றனர். எந்த வளர்ச்சி பணியாக இருந்தாலும் அதிமுகவினர் மறைமுகமாக இடையூறு செய்து வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். திமுக - வின் வெற்றிதான் நாம் அதிமுக விற்கு வழங்கும் பதிலடியாக இருக்கும் என்றார். முன்னதாக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கழக மருத்துவ அணி செயலாளருமான எழிலன் நாகநாதன், மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரும் கள்ளக்குறிச்சி தொகுதி பார்வையாளரு மான தாமரைக்கண்ணன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் தொகுதி பார்வையாளருமான பெறுநர் கிள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பி னர்கள் முருகன், எத்திராசு, மாநில விவசாய அணி துணை செயலாளர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் கனகராஜ், நெடுஞ் செழியன், அண்ணாதுரை, தலைமை பொது க்குழு உறுப்பினர் மணிமாறன், முன்னாள் நகர செயலாளர் கென்னடி, ஒன்றிய தலை வர் தாமோதரன், நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம் பானு அப்துல் ரசாக், துணை பெருந்தலைவர் விமலா முருகன், மாவட்ட சார்பணி அமைப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சின்ன சேலம் ஒன்றிய குழு தலைவர் சத்திய மூர்த்தி நன்றி கூறினார்.</p>
