தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் முடியும் வரை எஸ்ஐஆர் பணியை நிறுத்தி வைக்கக் கோரி திமுக மனு

11 Nov 2025, 3:41 pm
தேர்தல் முடியும் வரை எஸ்ஐஆர் பணியை  நிறுத்தி வைக்கக் கோரி திமுக மனு

தேர்தல் முடியும் வரை எஸ்ஐஆர் பணியை  நிறுத்தி வைக்கக் கோரி திமுக மனு

சென்னை, நவ. 11- நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு பின்பே எஸ்ஐஆர் பணியை தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத் திடம் திமுக மனு அளித்துள்ளது.  சென்னை தலைமைச் செயல கத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டமன்றத்து க்கு நான்கு மாத காலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போது எஸ்ஐஆர் மேற்கொள்ளக் கூடாது என்று திமுக மற்றும் திமுக தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகள் எச்சரித்துள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் கடிதங்களை வழங்கியுள்ளார். இதை சிறிதும் பொருட்படுத்தாமல் எஸ்ஐஆரை அமல்படுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை என்றும், எஸ்ஐஆர் வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு போதுமான படிவங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்கு பிறகு தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 6 மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இதுபோன்று எஸ்ஐஆர் நடத்தினால் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்தார்.

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை:  போட்டியின் சின்னமாக ‘காங்கேயன்’

றிமுகம் சென்னை, நவ.11 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14 ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார்.  மேலும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இந்த போட்டிகள் நவ.28 முதல் டிச.10 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை 2025 போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் மதுரையிலும் நடைபெற இருக்கின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.