தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘அரசு கார் வேண்டாம்’- திமுகவின் 59 உறுப்பினர்கள்; பேரவையில் சூடான விவாதம்

21 Aug 2026, 9:58 pm
‘அரசு கார் வேண்டாம்’- திமுகவின்  59 உறுப்பினர்கள்; பேரவையில் சூடான விவாதம்

‘அரசு கார் வேண்டாம்’- திமுகவின் 59 உறுப்பினர்கள்; பேரவையில் சூடான விவாதம்

சென்னை, ஆக. 21—முதலமைச்சர் வழங்கவிருக்கும் அரசு வாகனத்தைத் திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெறமாட்டோம்என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதால், தேவையற்ற செலவைத் தவிர்க்கும் நோக்கில், முன்னாள் முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், அனைவரும் கையெழுத்திட்ட கோப்பு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்; பொருளாதாரத்தில் நலிந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்கலாம் என்றார்.

பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வி.சி.க.வின் ஏழ்மையான உறுப்பினரின் கோரிக்கையின் பேரிலேயேமுதலமைச்சர் காரை அறிவித்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்கே மூன்று வீடுகள் இருந்தும் அரசு பங்களாவில்தங்கியுள்ளார் எனவும், தம் உறுப்பினர்களிடமும் கம்யூனிஸ்ட் உறுப்பினரிடமும் உண்மையிலேயே வீடோ காரோ இல்லை எனவும், கார் ஆடம்பரமல்ல தேவை எனவும் கூறினார்; ஏற்கெனவே கார் உள்ள தவெகவினர் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்றார். திமுகவின் கே.என். நேரு, அரசுக்குச் செலவுவைக்கக் கூடாது என்பதற்காகவே காரை மறுப்பதாகக் கூறினார். எ.வ. வேலு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொந்தவீட்டில் இருந்தாலும் அரசு வீட்டுவாடகை வழங்குகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவர் டி.ராமசந்திரன், கார் இல்லாத உறுப்பினர்களுக்கு வழங்கலாம், தம் கட்சி உறுப்பினர்களுக்குக் கார் தேவையில்லை என்றார். பாமக கணேஷ்குமார், மக்கள் பணிக்குக் கார் அவசியம் என்றார்.சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாஜகான், முன்பு கலைஞர் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்குக் கார் வழங்கிய போதும் இதே நிதிநிலைதான் இருந்தது என்றார்.

சர்ச்சைக்குக் காரணமான காட்டுமன்னார்கோவில் விசிக உறுப்பினர் ஜோதிமணி, ஆக. 12 அன்று 280 கி.மீ. தொலைவில் இருந்து பயணிப்பதாகவும் தொகுதிப் பணிகளுக்குக் கார் இல்லை எனவும் கூறி வாகன வசதி கோரியிருந்தார்; எனினும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சுமார் ரூ.86 லட்சம் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆக. 19 அன்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாகனமும் உதவியாளர்களும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.