தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை அவசர முடிவுகளை எடுக்க தலைவருக்கு அதிகாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

7 May 2026, 10:05 pm
தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை அவசர முடிவுகளை எடுக்க தலைவருக்கு அதிகாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை அவசர முடிவுகளை எடுக்க தலைவருக்கு அதிகாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, மே 7 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்காத நிலை யில், திமுக சட்டமன்ற உறுப்பினர் களின் ஆலோசனைக் கூட்டம் வியாழ க்கிழமை (மே 7) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 4 முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மக்களுக்கும் தோழமை கட்சிகளுக்கும் நன்றி

தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை மகிழ்வுடன் பதிவு செய்த கூட்டம், வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங் களுக்கும் இதயமார்ந்த நன்றியை முதல் தீர்மானமாக தெரிவித்தது. பெரும்பான்மை பெற்ற கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடை யிலான வாக்கு விழுக்காடு வேறு பாடு 3.52 விழுக்காடு மட்டுமே என்பதை சுட்டிக்காட்டிய கூட்டம், தமிழ்நாட்டு மக்கள் கழகத்தின் மீது வலிமையான நம்பிக்கை வைத்தி ருக்கிறார்கள் என்று தெரிவித்தது.

தலைவருக்கு அதிகாரம்

மூன்றாவது தீர்மானமாக, தற்போதைய நெருக்கடியான அர சியல் சூழலில் உடனடி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தை தலை வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கு வது என ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டது. திராவிட இயக்கத்தின் கொள்கை களுக்கு எதிரான மதவாத சக்தி களுக்கு எக்காரணம் கொண்டும் இட மளிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைவதே கழகத்தின் முதன்மை நோக்கம் என்றும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. இதனிடையே, திமுக - அதிமுக கூட்டணி என்பதற்கு இடமே இல்லை என தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு கண்டனம்

நான்காவது தீர்மானமாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகி மாற்று அணியை நோக்கி நகர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாநிலங்களவை இடமும் 28 சட்டமன்றத் தொகுதிகளும் உள்பட கூட்டணியில் பெரும் பங்கு பெற்ற காங்கிரஸ், வெற்றி கிடைத்த மூன்று நாட்களிலேயே முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளது என்று கூட்டம் வன்மையாக கண்டித்தது. புதுச்சேரியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி யிட்ட சம்பவத்தையும் கூட்டம் சுட்டிக்காட்டியது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக திமுக செய்தித் தொடர் பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கமளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.