தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

21 Jul 2026, 10:01 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தவெக அரசின் ஆணவத்திற்கு மக்களே முடிவு கட்டுவர்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக கூறி, கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பிறகு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்க முயலும் தவெக அரசின் போக்கை தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றின் இன்றைய தலையங்கம் கடுமையாக விமர்சித்து உள்ளதாகவும், ஆட்சியின் குறைபாடுகளை கைது நடவ டிக்கைகள் மூலம் சரிக்கட்ட முடியும் என அரசு நினைத்தால், அந்த ஆணவத்திற்கு மக்களே பொருத்த மான பாடத்தைக் கற்பிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ டுக்கு எதிராக முழக்கம்: ‘தெருக்குரல்’ அறிவு கைது!

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்ட ராப் பாடகர் ‘தெருக் குரல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் மாணவர் களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலை யில், மாநில அரசு இந்த தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, அறிவு இப்போ ராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அனுமதியின்றி போராட் டம் நடத்தியதாகக் கூறி, போலீசார் அவரைக் கைது செய்தனர். இதனிடையே அறிவு, முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ரூ. 9.44 கோடி வரை சொத்துக் குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாரா யணன், அவரது மனைவி ஜெயச்சித்ரா ஆகியோர், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதில் கூறியிருந்தனர். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கான காரணங்களை விளக்கி ஒரு வாரத் திற்குள் பதிலளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தர விட்டார்.

8,193 கோவில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, சட்டப்பிரிவு 49(1)-இன்படி பட்டிய லில் சாராத 8,193 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வும், இதற்கு தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நியமன விவரங்கள், கோவில் பட்டியல், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை www.hrce.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைனில் பூர்த்தி செய்தோ, பதிவிறக்கம் செய்தோ, அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரை வஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20, 2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்பலாம்.

பெரம்பூரில் விஜய் வெற்றிக்கு எதிரான வழக்கில் நோட்டீஸ்!

சென்னை, ஜூலை 21 - தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், விஜய் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியது, தேர்தல் அலுவலகச் செலவு ரூ.1 கோடியை மறைத்துக் கணக்கு காட்டியது மற்றும் 2011-2024 வருமானத் தகவல்களை மறைத்தது போன்ற தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்ட தாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னி லையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் ஆணை யத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, நோட்டீஸ் பெறாதவர் களுக்கும் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதி காரிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். திருச்சி கிழக்கில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்த வழக்கும் நிலுவை யில் உள்ளது.

திமுக எம்எல்ஏ கைது: சபாநாயகர் விளக்கம்

சென்னை: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். பேரவை தலைவரின் முன் அனுமதியின்றி எவரையும் கைது செய்யக் கூடாது என்ற விதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், பேரவை விதி 291-இன் படி பேரவை யின் அமைப்பு எல்லைக்குள் (பேரவை மண்டபம், அலுவல கங்கள், சிற்றுண்டி சாலை போன்றவை) மட்டுமே கைது செய்ய அனுமதி தேவை என விளக்கினார். எல்லைக்கு வெளியே கைது செய்ய அனுமதி தேவை யில்லை என்றும், மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதும் எஸ்.பி தனக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் இத்தக வல் அனைவருக்கும் பகிரப்படும் என்றார்.

நெய் விலை உயர்வா? - ‘ஆவின்’ மறுப்பு

சென்னை: ஆவின் நிறுவனம் மொத்த விற்பனையாளர் கமிஷனை குறைத்து, நெய் சில்லரை விலையை உயர்த்திய தாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை; எந்தவொரு நெய் வகையின் விலையும் உயர்த்தப்படவில்லை எனவும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மொத்த விற்பனையாளர் கமிஷன் தொடர் பாக மேற்கொள்ளப்பட்டிருந்த திருத்தம் திரும்பப் பெறப் பட்டு, முந்தைய கமிஷன் அமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆவின் கூறியுள்ளது.

அடுத்த 6 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு!

சென்னை, ஜூலை 21 - தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் பலவீனமான காற்ற ழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. புதனன்று, தமிழ கம், புதுவை, காரைக் கால் பகுதிகளிலும், 23, 24, 25 தேதிகளில் வட கடலோர தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், 26ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட் டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை, ஜூலை 21 - சென்னை திரு வொற்றியூர், தேனாம் பேட்டை ஆகிய இரு பகுதிகளிலும் செவ் வாயன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடு பட்டனர். திருவொற்றியூர் பகுதியில் போக்கு வரத்து தொழில் செய்யும் முருகேசன் என்பவரின் வீட்டிலும், தேனாம்பேட்டையில் வசிக்கும் ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் தரணிதரன் என்பவரின் வீட்டிலும், சிஆர்பிஎப் போலீசார் உதவியுடன் அமலாக்க த்துறையினர் சோத னையிட்டனர். சென்னையில் மேலும் சில இடங்களிலும் சோ தனை நடைபெறுவ தாக அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர் பான புகார் அடிப்படை யில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.