தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளது: கனிமொழி
9 Apr 2026, 5:30 am

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளது: கனிமொழி

திருவண்ணாமலை, ஏப். 8- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி செவ்வாயன்று இரவு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய கனிமொழி, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சொல்லிய வாக்குறுதிகளையும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளதாக கூறினார். ஆரணி பகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசிப்பதாகவும், அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதியத்தை ரூ.1500 முதல் 2000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் ,செயல்படாத 2 லட்சம் தறிகலன்கள் புனரமைக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரணி பகுதியில் 1500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், கமண்டல நதி கரைகளை பலப்படுத்தப்படும்,நெல் உற்பத்தி அதிகமாக உள்ள பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும், வேலான் பூங்கா மற்றும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கால்நடை மருத்துவமனையும் அமைக்கப்படும் என்றும் கனிமொழி வாக்குறுதி அளித்தார்.