தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக குழு பேச்சுவார்த்தை

28 Feb 2026, 2:29 pm
ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக குழு பேச்சுவார்த்தை

ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக குழு பேச்சுவார்த்தை

சென்னை, பிப்.28 - 2026 சட்டமன்றத் தேர்தலுக் கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொ டர்ந்து நடைபெற்று வருகிறது.  திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச் செய லாளர் கே.என்.நேரு, துணை பொ துச் செயலாளர்கள் திருச்சி சிவா  மற்றும் ஆ.ராசா, அமைப்பு செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பி னர்கள் எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மதிமுக ஆகியவற்றுடனும், அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி, கொங்கு நாடு தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய வற்றுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமையன்று காங்கிரஸ், மதிமுக உட்பட 9 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சனிக்கிழமை (பிப்.28) அன்று கிரிஷ் சோடங்கர் தலைமையி லான காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தைக் குழு திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, முதல்வர் ஒரு ராஜ்ய சபா (மாநிலங்களவை) சீட் கொடுப்ப தாக உறுதி கொடுத்திருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் சுமுகமாக வும் நடைபெற்றதாக தெரி வித்தார். இது கொள்கை கூட்டணி, மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணியில்  புதிய கட்சிகள் திமுக தலைமையிலான கூட்ட ணியில் 2021-இல் இருந்த கட்சி கள் அனைத்தும் இம்முறையும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் இணைந்துள்ளன. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்த லில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி, தற்போது அதிமுக கூட்டணியி லிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, தமி முன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவையும் இம்முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. புதிதாக இணைந்த கட்சிகள் அனைத்தும் சனிக்கிழமை திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.  இந்நிலையில், மல்லை சத்யா தொடங்கி இருக்கும் திராவிட வெற்றிக் கழகமும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித் துள்ளது. மார்ச் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவின் பேச்சுவார்த்தை குழு அழைப்பு விடுத்திருக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.