அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5%
22 Feb 2026, 6:29 pm
<p>அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சனிக்கிழமை (பிப். 21) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மண்டலச் செயலாளர் எஸ்.இராஜ ஜெயசிங் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் நந்தகுமார், ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
