போதை அதிகரிப்புக்கு திமுக ஆட்சியே காரணம்
17 Aug 2026, 9:34 pm

போதை அதிகரிப்புக்கு திமுக ஆட்சியே காரணம்

சென்னை, ஆக. 17 -கோவை மாணவர் கெ. அமுதன் படுகொலை தொடர்பான விவாதத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில்போதைப் பழக்கம் அதிகரித்ததற்கு திமுக ஆட்சியே காரணம் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள்குற்றம்சாட்டினர்.

உதயநிதி கேள்வி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன்கடந்த ஆட்சியின் முதலமைச்சர் குடும்பம், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் மு.க. ஸ்டாலின்அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும், ஆனால், தற்போதைய ஆட்சியில் அமைச்சரே மாத்திரைநுணுக்கிய வீடியோ வெளியான நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்விஎழுப்பினார்.

ஆதவ் அர்ஜுனா, விக்னேஷ்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, விக்னேஷ் ஆகியோர் போதைத் தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினர். போதைவிழிப்புணர்வுக்கு ரூ. 264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் ஆண்டுக்கு 40சதவிகிதம்அதிகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டி னார்.அமைச்சர் சரத்குமார், ஸ்டேடியம் விவகாரத்தில் ஏற்கெனவே விளக்கம் அளித்ததாகவும், தமது துறையில் கடந்தஆட்சியில் ரூ.850 கோடி ஊழல் நடந்ததாகவும் கூறினார்.

அரசு வேலை; ஓய்வூதியம்!

கோவை மாணவர் அமுதன் மற்றும் திருவொற்றியூர் மாணவர் கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் விஜய் உறுதி யளித்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். திருவொற்றியூர்மாணவரின் சகோதருக்கு அரசு வேலை வழங்கவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான நிதியுதவி மற்றும்பெற்றோர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.