தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

1 Jul 2026, 9:40 pm
திருச்சி விரைவு செய்திகள்

திமுக பிரமுகர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

விருதுநகர், ஜூலை 1- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திமுக பிர முகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் இலுப்பங்குளத் தைச் சேர்ந்த கலாநிதி (35), திமுக பிரமுகரும், முன்னாள் கள்ளிக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளருமாவார். புதன்கிழமை இரவு, தனது உறவினர் அஜித் (25) மற்றும் நண்பர் ஹரிஹரன் (30) ஆகியோருடன் இருசக்கர வாக னத்தில் குராயூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சோளம்பட்டி குதிரைக்கோவில் அருகே சென்ற போது, காரில் வந்த மர்ம கும்பல் அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து, காரிலிருந்து பயங்கர ஆயு தங்களுடன் இறங்கிய கும்பலைக் கண்டு ஹரிஹரன் தப்பி யோடினார். பின்னர், அந்த கும்பல் கலாநிதியை குறி வைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். அவரைக் காப் பாற்ற முயன்ற அஜித்துக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அஜித் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை யில், கலாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கலாநிதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதற்கிடையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கலாநிதியின் உறவினர்கள் விருது நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு, திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த தைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கணவர் மரணத்தில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

திருவில்லிபுத்தூர், ஜூலை 1- விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலூர் பஞ்சுவெட்டி தெருவைச் சேர்ந்தவர் வனராஜா. இவர் செவ்வாய்க்கிழமை இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது தோட் டத்திற்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. புதன்கிழமை காலை, செல்வம் என்பவர், வனராஜா வின் மனைவி முத்துமாரியிடம், மம்சாபுரம் மெயின் ரோட் டில் பெருமாள் செட்டியார் வீடு அருகே வனராஜா மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற முத்துமாரி, தனது கணவர் மூக்கு மற்றும் வாயில் நுரை தள்ளிய நிலை யிலும், ஆணுறுப்பில், வலது கால் தொடை மற்றும் விரல்களில் ரத்தக் காயங்களுடனும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆட்டோ மூலம் திரு வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்துமாரி மம்சாபுரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், செவ்வாய்க் கிழமை இரவு கந்தசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்த பொன் ராஜ் மற்றும் காமராஜ் ஆகியோர் தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்திற்கு வராத ஆணையாளர்: கவுன்சிலர்கள் கண்டனம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 1- திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர்மன்றத் தலைவர் ரவிக்கண் கன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 64 தீர்மா னங்கள் உறுப்பினர்கள் முன் வைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், ஆணையாளர் திருநெல்வேலியில் நடை பெற்ற மண்டல அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தாக தெரிவித்தார். எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அப்போது சில கவுன்சிலர்கள் பேசுகையில், “கடந்த காலங்களில் வார்டு உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டு அதிகாரிகள் செயல்பட்டனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்தும் எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவ தில்லை” என்று குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் ரவிக்கண் கன், “கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்த ஒத்துழைப்பு, கடந்த இரண்டு மாதங்களாக குறைந்துள்ளது என்பது உண்மை. மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் உரிய மரியாதை வழங்க வேண்டும். இன்று ஆணையாளர் தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெறும். அதில் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை நேரடியாக தெரி விக்கலாம். தொடர்ந்து ஒத்துழைப்பு இல்லாத நிலை நீடித்தால் அவசரக் கூட்டம் கூட்டி உரிய முடிவு எடுக்கப் படும்” என்றார். கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வ மணி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், உதவி பொறி யாளர் திவாகர், சுகாதார அலுவலர் கந்தசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்ட அறிவிப்பால் பணியிட மாறுதல் கோரிக்கை ஏற்பு

திருவில்லிபுத்தூர், ஜூலை 1- விருதுநகர் மாவட்டத் தில் கிராம நிர்வாக அலுவ லர்களுக்கான பணியிட மாறு தல் தொடர்பான கோரிக்கை யைத் தொடர்ந்து அறிவிக் கப்பட்டிருந்த போராட்டம், நிர்வாகம் நடவடிக்கை எடுத் ததை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. வருவாய்த் துறையில் பசலி ஆண்டு அடிப்படை யில், நகரப் பகுதிகளில் பணி யாற்றும் கிராம நிர்வாக அலு வலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும், கிராமப் புறங்களில் பணியாற்றுவோ ருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பணியிட மாற் றம் வழங்குவது வழக்கம். அதன்படி, அருப்புக் கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட் பட்ட பகுதிகளில் விதிமுறை களின்படி பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிவகாசி வரு வாய் கோட்டாட்சியர் அலு வலகத்துக்கு உட்பட்ட இராஜபாளையம், திரு வில்லிபுத்தூர் மற்றும் வத்தி ராயிருப்பு வட்டாட்சியர் அலு வலகங்களில் பணியாற் றும் கிராம நிர்வாக அலு வலர்களுக்கு பணியிட மாற் றம் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டும், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கம் சார்பில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தெரி விக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, திங்கள்கிழமை சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பில் இருந்த மாவ ட்ட வருவாய் அலுவலர் உட னடியாக பணியிட மாற்ற நட வடிக்கைகளை தொடங்கி னார். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அறி வித்திருந்த தற்செயல் விடுப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராக, அரசு விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் மேற் கொள்ளப்பட்டது. இதில் திரு வில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த 12 கிராம நிர்வாக அலுவ லர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதே போல் இராஜபாளையம் மற் றும் வத்திராயிருப்பு பகுதி களிலும் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

நெல் கொள்முதல் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

கூடுதல் கூலி புகாரில் சமரசம் திருவில்லிபுத்தூர், ஜூலை 1- திருவில்லிபுத்தூரில் மடவார் வளாகம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் மையத் தில், சுமைப் பணித் தொழிலாளர்கள் கூடுதல் கூலி கேட்பதாக விவசாயிகள் அளித்த புகாரையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். பெரியகுளம் கண்மாய் மற்றும் வட்டார கண்மாய் கள் பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வ தற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் அலுவலராக ஜோன்ஸ் பாக்கியா, உதவியாளராக வெள்ளத்துரை ஆகியோர் பணி யாற்றி வருகின்றனர். சேத்தூர் பகுதியைச் சேர்ந்த இசக்கி தலைமையிலான சுமைத் தொழிலா ளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு நெல் மூடைக்கும் ரூ.40 கூடுதலாக சுமைத் தொழிலா ளர்கள் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்த னர். இதையடுத்து, விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆதிலட்சுமி மற்றும் கண்காணிப்பாளர் கொள்முதல் மையத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது, விவசாயிகள் தங்களது புகாரை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மண்டல மேலாளர் விவசாயிகள் மற்றும் சுமைத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் தொகை கேட்கக் கூடாது என்றும், விவசாயிகள் விருப்பத்துடன் வழங்கும் தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார். நெல் கொள்முதல் மையத்தில் தினமும் 800 முதல் 1,000 மூடைகள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மூடைக்கும் சுமைத் தொழிலாளர்களுக்கு ரூ.10 கூலி வழங்கப்படுகிறது. ஆயிரம் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டால் மொத்தமாக ரூ.10 ஆயிரம் கிடைத்தாலும், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் கூலி குறைவாக உள்ளது. இதுவே விவசாயிகளிடம் கூடுதல் தொகை கேட்கும் நிலைக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையில் அதிகாரிகள் தலை யிட்டு சமரசம் செய்து, விவசாயிகளை கட்டா யப்படுத்தி கூடுதல் தொகை கேட்கக் கூடாது என சுமைத் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மோகன்ராஜ், வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.