கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
6 Feb 2026, 5:17 pm

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும்!

சேலம், பிப்.6- திமுகவின் தேர்தல் அறிக்கை, அனைத்து தரப்பு மக்க ளின் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் சாசன மாக திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என அக்கட்சி யின் துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனி மொழி தெரிவித்தார். சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமையிலான இக்குழு வினர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வணிகர்கள், நெசவாளர்கள், விவசா யிகள், சமுதாயப் பிரதிநிதிகள், சிறுபான்மையினர் அமைப்பு கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந் நிகழ்வில் மாநில அமைச்சரும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளருமான ர. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி எம்பி., எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., மதுரை மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தற்போதைய நிலை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டார். அவர் கூறுகையில், நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் விசித்திரமான சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது கண்டிக் கத்தக்கது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பிரதமர் கலந்து கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது முறையற்றது. எதிர்க்கட்சி பெண் உறுப்பி னர்களால் பிரதமர் தாக்கப்படுவார் எனக் கூறி பாதுகாப்பு காரணங்களை அடுக்குகின்றனர். நாட்டின் பிரதமருக்கே நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு இல்லாத ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம், என்றார்.

கிராமப்புற நூறு நாள் வேலை திட்டத்தை காந்தி பெயரிலேயே தொடர வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.6- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை எவ்வித சீர்குலைவும் செய்யா மல் தொடர்ந்து காந்தி பெயரிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், பிப்.12 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் முழுமையாகப் பங்கேற்பது என்றும் தீர்மானித்துள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை பி.கே.ஆர்.இல்லத்தில் வெள்ளியன்று சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.பூங்கொடி தலைமையில் விரிவடைந்த மாவட்டக்குழு கூட் டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் வி.பி.பழ னிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் விபி ஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொழிற்சங்கங் கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் பொது வேலை நிறுத்தத்திலும், அவிநாசி, காங்கயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய 6 மையங்களில் நடைபெறும் மறியலிலும் தமிழ் மாநில விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

இன்று மின்தடை

ஈரோடு, பிப்.6- ஈரோடு மாவட்டம், தண் ணீர்பந்தல் துணை மின் நிலையத்திற்குட்பட்ட முத் தையன் கோவில் பீடரில் நெடுஞ்சாலைத்துறை பரா மரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால், சாலையோர மாக உள்ள மின்மாற்றி மற்றும் எச்டி/எல்டி மின் பாதை மாற்றி அமைக்கும் பணி சனியன்று (இன்று) நடைபெறவுள்ளது. இதனால் முத்தையன் கோவில், கொங்கு கல்வி நிலையம், சின்ன பிடாரியூர், பாரதி நகர், எம்.பி.என்.நகர், சரவணபுரி, ஸ்ரீராம் கார்டன் ஆகிய பகுதிகளில் சனி யன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி தெரி விக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயில்களில் நகைப்பறிப்பு எதிரொலி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு

சேலம், பிப்.6- சேலம் வழியே செல்லும் ரயில்களில் நகைப்பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடப்ப தால், ஒவ்வொரு ரயில்வே நிலையங்களின் ஹோம் சிக்னல்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வழித்தடங் களில் இயங்கும் ரயில்களில் நகைப்பறிக் கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இச்செயலில் ஈடுபடும் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க ஒவ்வொரு ஆண் டும், கோடைக்கு முன்பே தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாது காப்பு படையினர் இணைந்து தனிப்படை கள் அமைக்கப்படுகிறது. இச்சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இரவு சேலத்தை அடுத்த ஈரோடு காவேரி பாலம் மற்றும் ஈரோடு ரயில் நிலை யம் ஹோம் சிக்னல் பகுதியில் வைத்து எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், கோவை-மயிலாடுதுறை செம்மொழி எக்ஸ் பிரஸ் ரயில்களில் 2 பெண் பயணிகளிடம் 6 பவுன் நகையை சிலர் பறித்துச் சென்றனர். அந்த ரயில்கள் மெதுவாக இயங்கும் இடத்தை சரியாக கணக்கிட்டு, இந்த நகைப்பறிப்பில் கொள்ளையர்கள் ஈடுபட்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து சென்றுள் ளனர். இந்த நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள் ளையர்களை பிடிக்க சேலம் ரயில்வே டிஎஸ்பி (பொ) பாபு, ஆய்வாளர்கள் சிவ. செந்தில்குமார். பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இதனிடையே தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ரயில்வே வழித்தடங்களில் இருக் கும் ரயில்நிலையங்களில் 24 மணி நேர கண் காணிப்பில் ஈடுபட்டு, நகைப்பறிப்பு கொள் ளையர்களை பிடிக்க ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தனிப்படைகளை அமைத்துள் ளார். சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் பகுதியில் கண்காணிக்க தமிழ்நாடு ரயில்வே போலீசாரோடு இணைந்து ஆர்பிஎப் காவல் துறையினரும் கண்காணிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் முன்பகுதியில் இருக் கும் ஹோம் சிக்னல்களில் துப்பாக்கி ஏந்திய கண்காணிப்பு பணியை வியாழனன்று இரவு முதல் துவங்கியுள்ளனர். சேலம், பொம்மிடி, மொரப்பூர், தர்மபுரி, ஓசூர். ஈரோடு, திருப்பூர், கோவை, கோவை வடக்கு, போத்தனூர், நாமக்கல், கரூர் ஆகிய ரயில் நிலையங்களி லுள்ள ஹோம் சிக்னல்களில் துப்பாக்கி ஏந் திய காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.6- தொப்பூர் அருகே பொதுமக்களுக்கும், பெண்க ளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந் துள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பபட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூரை அடுத்த உம்மியம்பட்டி கிராமத்திற்கு வெளிப்புறத்தில் அரசுக்கு சொந்தமான மது பானக்கடை செயல்பட்டு வந்தது. இக்கடை கடந்த 15 நாட்களுக்கு முன்பு செட்டிக்கோம்பை பிரிவு சந் திப்பு சாலையோரம் இடமாற்றம் செய்யப்பட்டது. இக் கடையில் மதுபானங்களை வாங்கி அருந்துவோர், அவ்வழியாக சாலையில் செல்பவர்களுடன் தகரா றில் ஈடுபட்டு வருகின்றனர். செட்டிக்கோம்பை, உம்மி யம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு வருபவர்களை கேலி, கிண்டல் செய்வதும், அதனால் வாக்குவாதம், அடி தடி ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், கிராமப்புற பெண்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, செட்டிக் கோம்பை பிரிவு சாலையிலுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உதவிப் பொறியாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

உதகை, பிப்.6- திட்ட மதிப்பீடு தயாரித்ததில் கவன குறைவாக இருந்ததாகக்கூறி, உதகை நகராட்சி உதவிப் பொறி யாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் உதவிப் பொறியாளராக சண்முகசுந்தரம் மற்றும் பணி மேற் பார்வையாளராக சண்முகவள்ளி ஆகியோர் பணி யாற்றி வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவர்கள் இருவருமே வளர்ச்சிப் பணிகள் தொடர்பான திட்ட மதிப்பீடு தயாரித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் போது கவன குறைவாக இருந்ததால் அந்த திட்ட மதிப்பீட்டில் பல்வேறு தவறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத்தொ டர்ந்து சென்னையில் உள்ள நகராட்சித்துறை இயக்கு நர் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் இவர்கள் திட்ட மதிப்பீடு தயாரித்ததில் கவனக்குறை வாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதைத்தொ டர்ந்து இவர்கள் இருவரையும் நகராட்சித்துறை இயக் குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். உதவிப் பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் சண்முக வள்ளி ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச் சாட்டுகளை நகராட்சி கவுன்சிலர்கள் சுமத்தி வந்த னர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சாலையோரம் யானைகள் நடமாட்டம்

உதகை, பிப்.6- குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, பர்லியாறு பகுதியில் குட்டியுடன் யானைகள் உலா வந்தன. சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்திய மங்கலம், சிறுமுகை, ஆகிய பகுதிகளில் வெயிலின் காரணமாக வறட்சி நிலவுவதால், யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டமான நீலகிரிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இவை, குன்னூர் - மேட்டுப் பாளையம் தேசிய நெடுஞ்சாலை, குரும்பாடி, புதுக் காடு பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வந்து செல்கின்றன. இந்நிலையில், பர்லியாறு பகுதியில் குட்டியுடன் யானைகள் வியாழனன்று சாலையோரம் நடமாடின. இதனைக்கண்ட வாகன ஓட்டிகளில் சிலர், வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர்.

நகை பறிப்பு – ஒருவர் கைது!

நாமக்கல், பிப்.6- பள்ளிபாளையம் அருகே பெண் காவலரின் மனை வியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலை யத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி உமாராணி. இவர்கள் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் வசித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை, பாப்பம்பாளையம் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்து வருவ தற்காக உமாராணி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் உமாராணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளி பாளையம் டிஎஸ்பி கௌதமன் மற்றும் காவல் ஆய்வா ளர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படை கள் அமைக்கப்பட்டன. ஓடப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி களை ஆய்வு செய்ததில், நகை பறிப்பில் ஈடுபட்டது சங்ககிரியை சேர்ந்த வேல்முருகன் என்பது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வேல்முருகன் லாரி பட்டறை நடத்தி வருவது விசாரணையில் தெரி யவந்தது. திருடிய நகையை சங்ககிரியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஊழியரின் உதவியுடன் உருக்கி, தங்க நாணயங்களாக மாற்றி விற்க முயன்றதும் அம்பல மானது. இதனையடுத்து, வியாழனன்று வேல்முருகனை முறையாக கைது செய்த பள்ளிபாளையம் போலீசார், அவரிடமிருந்து மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். பெண் காவலரின் மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவி யுடன் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களாக தேங்கியிருக்கும் குப்பை

திருப்பூர், பிப்.6 - இடுவாய் கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக குப்பை அள்ளப்படாமல் பல்வேறு இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற் பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரை ஒட்டி மேற்குப் பகுதி யில் அமைந்திருப்பது இடுவாய் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட இடுவாய், ஆட் டையம்பாளையம், சின்னக்காளிபாளை யம், பாரதிபுரம் மற்றும் விரிவாக்க புதிய குடியிருப்பு பகுதிகள் என தற்போதைய மக்கள் தொகை 12 ஆயிரத்தைத் தாண்டியி ருக்கிறது. இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாத காலமாக வீதிகளில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்படாமல் அப்படியே தேங்கி யிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து இடுவாய் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளருமான கே.கணேசன் கூறியதாவது: இடுவாய் ஊராட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் இருந்த போது சீரான இடைவெளியில் குப்பை அகற்றப்பட்டு வந்தது. விரிவடைந்த புதிய குடியிருப்புகள், மக்கள் தொகை அதிகரித்தி ருக்கும் நிலையில் தூய்மைப் பணியாளர் கள் 18 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களை கொண்டு ஊராட்சி பகுதியில் குப்பையைத் தொடர்ந்து அகற்றி வந்தோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. தற்போது அதிகாரிகள் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருப் பூர் மாநகராட்சி குப்பையை சின்னக்காளி பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் கொட்டுவதற்கு வந்த போது எதிர்ப்பு கிளம்பியது. தொடர் போராட்டங் களை முன்னெடுத்த நிலையில் இடுவாய் ஊராட்சி குப்பையையும் அகற்றி பாறைக் குழியில் கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இங்கு சேகரமாகும் குப்பையை எங்கு கொட்டுவது என்ற கேள்வியால் இங்கு குப்பை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது இடுவாய் ஊராட்சியில் தூய் மைக் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் எண்ணிக்கை 29 பேராக அதிகரிக்கப்பட்டுள் ளது. எனினும் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பை அகற்றப்படாமல் தேங்கி யிருக்கிறது. ஆங்காங்கே குப்பைக்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர். இது பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்து கிறது. எனவே தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் வலியு றுத்தி இருக்கிறோம் என்று கணேசன் தெரி வித்தார். மேலும் குப்பையை பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வாங்கினால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்றும் அவர் கூறினார்.