தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Feb 2026, 4:57 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

குழிக்குள் தவறி விழுந்து தொழிலாளி பலி

ஈரோடு, பிப்.12- சிவகிரி அருகே சாலை யில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் இருசக்கர வாகனத்தில் வந்த தொழி லாளி தவறி விழுந்து உயி ரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், சிவ கிரி காவல் நிலையத்திற்குட் பட்ட மின்னப்பாளையம் பழ னியாண்டவர் குன்று பகு தியை சேர்ந்தவர் வடிவேல்  (42). கட்டிடத் தொழிலாளி யான இவர், செவ்வாயன்று இரவு மின்னப்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று  கொண்டிருந்தார். மின்னப் பாளையம் மோட்டார் அறை  அருகே வந்தபோது, சாலை யில் சாக்கடை கழிவுநீர்  செல்ல பாலம் அமைக்கும்  பணிக்காக தோட்டப்பட்டி ருந்த குழிக்குள் தவறி விழுந் தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த வடி வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி காவல்  துறையினர் சம்பவ இடத் துக்கு சென்று வடிவேலின் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக பெருந் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி?

நாமக்கல், பிப்.12- சேந்தமங்கலம் அருகே காய்ச்சல்  காரணமாக சிறுமிக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் அடுத்த துத்திக்குளம் ரெட்டிபுதூர்  காலனியைச் சேர்ந்த அருள்பாண்டி யன், விண்விழி தம்பதியரின் மகள் லிதியா (12), காளப்பநாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6  ஆம் வகுப்பு படித்து வந்தார். லிதியா வுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல்  பாதிப்பு இருந்துள்ளது. இதனைய டுத்து சிறுமியை நாமக்கல் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர  சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில் புதனன்று சிகிச்சை பலனின்றி சிறுமி  லிதியா உயிரிழந்தார். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  இதனையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமி வசித்து வந்த பகுதியில், ஆய்வு  செய்து நடவடிக்கை மேற்கொண்ட தோடு, கொசு மருந்து அடிக்கும் பணி யில் ஈடுபட்டனர்.

தன்னைத்தானே செதுக்கும் சிலை

கோவை, பிப்.12- கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம்  எதிரே தன்னைத்தானே செதுக்கிக்கொள் ளும் தனித்துவமான தொழிலாளர் சிலையை  மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கோவை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் அழகு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. குறிப்பாக முக்கிய ரவுண்டானாக்க ளில் கலைநயமிக்க சிலைகள் அமைத்து நக ரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் நட வடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை நீதிமன்றம் எதிரோ தொழில் நகரமான கோவையை பிரதி பலிக்கும் வகையில் புதிய சிலை நிறுவப்பட் டுள்ளது. இந்த சிலை, கையில் உளியுடன் தன் னைத் தானே செதுக்கும் தொழிலாளரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கோவையின் தொழில் பாரம்பரியத்தை யும் உழைப்பாளர்களின் பெருமையையும் பிரதிபலிக்கிறது. தனியார் தொண்டு நிறுவ னம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த சிலையை  மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநக ராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் வியாழனன்று திறந்து வைத்தனர். புதிய சிலை அமைக்கப்பட்டதன் மூலம் ரவுண் டானா பகுதி மேலும் கண்ணைக் கவரும்  வகையில் மெருகேறியுள்ளது. வாகனங்க ளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும்  பாதசாரிகள் மத்தியில் இந்த சிலை சிறப்பு கவ னத்தை ஈர்த்துள்ளது. மாநகரத்தின் கலைந யம் மற்றும் அடையாளத்தை வலுப்படுத்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை  ரேசன் முகாம் நடைபெறும் இடங்கள்

திருப்பூர், பிப்.12 – திருப்பூர் மாவட்டத்தில் வரும் சனியன்று  ரேசன் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறு கிறது. அவிநாசி வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி வஞ்சிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தாராபுரம் வட்டம் குண்டடம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், மடத்துக்குளம் துங்காவி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங் கம், பல்லடம் கோடாங்கிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்,  திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் தொடக்க  வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், திருப்பூர்  தெற்கு விஜயாபுரம் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கம், உடுமலை வட்டம்  செல்லப்பம்பாளையம் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கம், ஊத்துக்குளி கூனம் பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் காலை 10 மணி  முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடை பெறும். இதில் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்து நிவர்த்தி காணலாம் என டிஆர்ஓ கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை வருகை

திருப்பூர், பிப்.12 – திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு  திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய  தொகுதிகளுக்கு கோரிக்கைகளை கேட்டறிய வரும் 14ஆம்  தேதி சனிக்கிழமை வருகிறது. கோவை திருச்சி சாலையில் உள்ள காரணம்பேட்டை ஸ்ரீ  வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் சனியன்று காலை 10  மணியளவில் கோரிக்கை மனுக்களைப் பெறுகின்றனர். தேர்தல் அறிக்கைக் குழுவினரிடம் அனைத்து தரப்பினரும் தங்கள் கோரிக்கை மனுக்களை தரலாம் என திமுக மாவட்டச்  செயலாளர்கள் க.செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் ந.தினேஷ்கு மார் ஆகியோர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.