தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக வேட்பாளர்களுக்கு உடுமலை, தாராபுரத்தில் உற்சாக வரவேற்பு

30 Mar 2026, 3:40 pm
திமுக வேட்பாளர்களுக்கு உடுமலை, தாராபுரத்தில் உற்சாக வரவேற்பு
<p><strong>திமுக வேட்பாளர்களுக்கு உடுமலை, தாராபுரத்தில் உற்சாக வரவேற்பு</strong></p> <p>உடுமலை, மார்ச் 30 - மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு திங்களன்று கூட்டணி கட்சிகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் தாராபுரம் அலுவலகத் திற்கு திமுக வேட்பாளர் வருகை தந்து ஆதரவு கோரினார். திமுக சார்பில் உடுமலைப் பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு இளைஞர் அணி மாவட்ட அமைப்பா ளர் ஜெயக்குமார், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் &nbsp;சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிரு ஷ்ணன் ஆகியோருக்கு மடத்துக்கு ளம் தாலுகா காரத்தொழுவில் கூட் டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். பின்னர் உடுமலை திமுக கட்சி அலு வலகத்தில் நகரச் செயலாளர் வேலுச் சாமி தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் &nbsp;செய்து வைக்கப்பட்டனர். இதைதொ டர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகத்தில் கட்சியின் உடு மலை நகரச் செயலாளர் தண்டபாணி &nbsp;தலைமையில் வேட்பாளர்கள் சந் திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் மதுசூதனன், குமார், கன கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலாளர் கள் ஜெகதீசன், சசிகலா உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர். தாராபுரம் அலுவலகத்தில் வரவேற்பு தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொ குதியில் மதச்சார்பற்ற முற்போக்கு &nbsp;கூட்டணியின் சார்பில் போட்டியி டக்கூடிய திமுக வேட்பாளர் டாக்டர் &nbsp;இந்திராணி திங்களன்று மாலை தாரா புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா அலுவல கத்திற்கு வருகை தந்தார். இங்கு வேட்பாளர் இந்திராணி மார்க்சிஸ்ட் கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி னார். அவருக்கு சால்வை அணி வித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் வர வேற்றனர். மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணியை வெற்றி பெறச் &nbsp;செய்ய உழைப்போம் என்று மார்க் சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். &nbsp;இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ், தாராபுரம் தாலுகா குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன், நகரக் கிளைச் செய லாளர் மேகவர்ணன், சீரங்கராயன், திமுக நகரச் செயலாளர் முருகானந் தம், மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.