நிர்வாக அனுபவத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர் உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!
11 Apr 2026, 5:30 am

நிர்வாக அனுபவத்துடன் களம் காணும் திமுக வேட்பாளர் உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!

உடுமலை, ஏப்.10- உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் தென்னரசுவின் பிரச்சார நடைமுறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உடுமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னரசு, பெரியகோட்டை, காமராஜ் நகர், சிவசக்தி நகர் மற்றும் குடிசைமாற்று வாரியத் திட்டப் பண்ணைக்கிணறு, ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கவுன்சிலராகப் பணியாற்றிய தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக உடுமலை நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இதனால் நகராட்சி நிர்வாகம் குறித்தும், வார்டு வாரியாக மக்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நான் முழுமையாக அறிவேன். மக்களின் குறைகளைத் தீர்க்க நான் புதிதாக படிக்க வேண்டியதில்லை; ஏற்கனவே அவற்றை தெரிந்து வைத்துள்ளேன். அந்த பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களைந்து, உடுமலை நகரை அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவதே எனது முதல் பணி, என்றார்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, சிபிஎம் நகரச் செயலாளர் தண்டபாணி, திமுக குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் அய்யாவு முரளி, இளைஞரணி செயலாளர் அர்ஜுனன், காங்கிரஸ் நகரச் செயலாளர் ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.